செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking
முக்கிய செய்திகள்

உங்கள் கண் பார்வையை பாதுகாத்துக்கொள்ள இலகுவான வழிகள் இதோ

பகிர: Facebook WhatsApp X Telegram
இடது கண்கள் அடிக்கடி துடிப்பது ஆபத்தா? அதற்கு என்ன காரணம்?

கண் பார்வை என்பது அனைவருக்கும் ஆரோக்கியமான ஒரு விடயமாகும்.பார்வை பறிபோனால் வாழ்க்கையே இருள்மயமாகிவிடும்.

இவ்வாறான இந்த கண்பார்வையை ஆரோக்கியமாக வைக்க சில எளிய வழிகளை காணலாம்.

எளிய வழிகள்

நல்ல கண் பார்வை பெற தினசரி 7 – 8 மணி நேரம் நன்றாக தூங்குவது அவசியம். இதனால் கண்கள் நல்ல ஓய்வை பெறுவது ஆரோக்கியமாக இருக்கும்.

மொபைல், கணனி உள்ளிட்ட டிஜிட்டல் திரைகளை நீண்ட நேரம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். நீண்ட நேரம் டிஜிட்டல் திரை வெளிச்சத்தை பார்ப்பது கண் விழித்திரைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.

தினமும் இருவேளை உள்ளங்கைகளால் கண்களை மூடிக் கொண்டு சில நிமிடங்கள் பயிற்சி செய்ய வேண்டும்.

கண் பார்வையை மேம்படுத்தும் மீன், கரட், பப்பாளி போன்ற உணவுகளை அவ்வபோது எடுத்துக் கொள்ள வேண்டும்.

கண்ணை கூசும் வெயில் வெளியே சென்றால் கூலிங் க்ளாஸ் போன்றவற்றை அணிந்து கொள்ள வேண்டும்.

இரவு நேரங்களில் முக்கியமாக நள்ளிரவு நேரங்களில் விழித்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

தினசரி இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இது உடல் சூட்டை குறைப்பதுடன், கண் நரம்புகள் சிறப்பாக செயல்பட உதவும்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram