சனி, நவம்பர் 28, 2026
Breaking
Cinema

வெளியானது விஸ்வரூபம் 2 !! Trailer உள்ளே .

பகிர: Facebook WhatsApp X Telegram
Capture-156

விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் விஸ்வரூபம். இப்படத்தின் வெற்றியை அடுத்து இரண்டாம் பாகத்தினை உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டனர். அதன்படி இப்படத்தின் இரண்டாம் பாகம் சத்தமில்லாமல் வெளியிடத் தயாராகி விட்டது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகமான விஸ்வரூபம் 2 திரைப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து ராகுல் போஸ், பூஜா குமார், ஆன்ட்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தை ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் மற்றும் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ளன.

கமல்ஹாசன் மற்றும் அதுல் திவாரி இணைந்து இப்படத்தின் கதையை எழுதியுள்ளனர். மேலும் ஜிப்ரான் இசையமைக்க, மகேஷ் நாராயணன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

YouTube video

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்