தமிழகத்தில் கணவன் மனைவியாக வாழ்ந்த ஈழத்து இளம் தம்பதி செய்த மோசமான செயல்!

தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கை தம்பதியினர் இலங்கைக்கு தப்பித்து செல்ல முற்படுகையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவரம்பூர் துவாக்குடியை அடுத்து உள்ள வாழவந்தான் கோட்டையில் இருக்கும் அகதிகள் முகாமில் வட்டி தொழில் செய்து வருபவர் 50 வயதான இலங்கை அகதி தேவகுமாரி.

இவர் கடந்த 4ம் தேதி அய்யம்பட்டி சாலையில் நடந்து செல்லும் போது 3 பேர் கத்தியை காட்டி 10 பவுன் நகைகளை மிரட்டி வாங்கி சென்றனர்.

இதில் சந்தேகத்தின் பெயரில் அகதிகள் முகாமில் உள்ள சிவகுரு, விக்னேஷ் ஆகியோரை பொதுமக்கள் பிடித்து துவாக்குடி போலிசிடம் ஒப்படைத்தனர்.

இவர்களின் கூட்டாளி ராஜா என்பவன் நாமக்கல் அகதிகள் முகாமை சேர்ந்தவன் என்றும் அவன் கணவன் மனைவியாக தலைமறைவாகி இருப்பதும் போலிசுக்கு தெரியவந்ததும் தீவிர விசாரணையில் இறங்கினர்.

இளம் வயது கணவன் மனைவியாக இரண்டு பேர் திருட்டு நடந்த இடத்தில் அருகே உள்ள தெருக்களில் எல்லாம் வீடு வாடகைக்கு கேட்டு வந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட தம்பதியினர் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், வீடு வாடகைக்கு கேட்டு தெருக்களில் சுற்றும்போது பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு பட்டபகலில் அந்த வீடுகளில் கைவரிசை காட்டியுள்ளார்கள்.

2004 முதல் சைக்கிள் மற்றும் பைக் திருட்டுவது பழக்கம் ஆகி என்மீது நாமக்கல் காவல்நிலையங்களில் திருட்டு வழக்குகள் பதிவு செய்தனர். இதன் பிறகு 3 வருடம் சிறையில் இருந்து வெளியே வந்ததும் தனியாக இருந்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

குறிப்பாக இதுவரைக்கும் 100 பவுனுக்கு மேல் கொள்ளையடித்த நகைகளை எல்லாம் நாமக்கலில் உள்ள அடகு நகைகடைகளில் வைத்து பணம் பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்தோம் என வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த தம்பதியினர் குறித்து அனைத்து காவல்நிலையத்திற்கும் தெரியப்படுத்தி வைத்திருந்த நிலையில் இலங்கைக்கு தப்பி செல்வதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்த நிலையில் தனிப்படை பொலிசாரால் என்.ஐ.டி அருகே கைது செய்யப்பட்டுள்ளனர்

தற்போது இவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த தம்பதியினர் தாங்கள் திருடிய நகைகளை வாங்கி நகைக்கடை உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like