Srilanka

இலங்கை செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்று! கொழும்பு – வெள்ளவத்தையில் சீல் வைக்கப்பட்ட வீடு

இலங்கையில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்று சீல் வைக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த வீட்டிலிருந்த இருவரை தனிமைப்படுத்தல்...

வீட்டிலிருந்தவாறே சிகிச்சை பெறலாம் – புதிய வழிமுறையை அறிமுகம் செய்த அரசாங்கம்…!

வெளிநோயாளர் பிரிவிற்கு வருகை தரும் நோயாளர்கள் வீட்டிலிருந்தவாறே தங்களுக்குரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்காக விசேட வேலைத்திட்டம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு...

சற்று முன்னர் வெளியான அறிக்கை! ஸ்ரீலங்காவில் மேலும் அதிகரித்தது கொரோனா தொற்று

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்ந்தும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது வரை 12 பேர்...

கொரோனாவால் உயிரிழந்தவர் யாழில் தங்கிய ஐந்து சந்தி முற்றுகை!! 120 பேரை தேடும் பணிகள் தீவிரம்

கொரோனா வைரஸ் நோயால் நேற்று மாலை உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தில் அங்கியிருந்த இடங்கள் முற்றுகையிடும் நடவடிக்கை தற்போது தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக யாழ்.நகரை அண்மித்த ஐந்து சந்திப் பகுதியே இவ்வாறு சுகாதார துறையினர், பொலிஸ் மற்றும்...

திருவிழா நிதியில் கிராம மக்களுக்கு உதவிப்பொருள்கள் வழங்கியது சரசாலை காளி கோவில்

தென்மராட்சியில் சரசாலை காளி கோவிலின் மணவாளக்கோல உற்சவ திருவிழாவிற்கான உபய நிதியில் மக்களுக்கான அத்தியாவசிய பொருள்களை வழங்கிய முன்மாதிரியான செயற்பாடு இன்று இடம்பெற்றுள்ளது. சரசாலையில் அமைந்துள்ள காளி கோவிலின் வருடாந்த மணவாளக்கோல திருவிழா வழமைபோல...

நாட்டு மக்களுக்காக மேலும் பல நிவாரணங்களை அறிவித்தார் ஜனாதிபதி

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் மற்றும் இடர் நிலைமைக்குள்ளான குடும்பங்கள் மற்றும் நபர்களுக்கு மேலும் பல பண மற்றும் பொருள் நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளன. ஒரே தடவையில் வழங்கப்படும் கொடுப்பனவாக...

மட்டக்களப்பில் 8 மாத கர்ப்பிணியாக மீட்கப்பட்ட 15 வயது சிறுமி

மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவர் தனது சிறிய தந்தையால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து அவர்கள் குறித்த சிறுமியின் வீட்டை முற்றுகையிட்டு...

கட்டுநாயக்காவில் தரையிறங்கிய விசேட விமானம்

இலங்கையில் கல்வி கற்றுக்கொண்டிருந்த 86 பூட்டானிய மாணவர்களை அழைத்துச் செல்ல சிறப்பு விமானம் இன்று மதியம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. பெல்லூவ் ஏர்லைன்ஸ் பூட்டானுக்கு சொந்தமான இந்த விமானம் பூட்டானில்...

கொரோனாவால் உயிரிழந்த நீர்கொழும்பு வாசி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்! அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

நாட்டில் இன்று கொரோனா வைரஸால் உயிரிழந்த நீர்கொழும்பு வாசி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன. நீர்கொழும்பு கொச்சிக்கடையைச் சேர்ந்த 64 வயதுடையவர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...

ஊரடங்குச் சட்டத்தை மீறியதாக 11 நாள்களில் 7 ஆயிரம் பேர் கைது – ஆயிரத்து 700 வாகனங்கள் தடுப்பு

நாடுமுழுவதும் ஊரடங்கு வேளையில் வீதிகளில் நடமாடிய 7 ஆயிரத்து 98 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், ஆயிரத்து 702 வாகனங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். நாடுமுழுவதும் தொடர் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 19...