‘விஜய் 61’ படத்தின் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானது

நடிகர் விஜய், அட்லி இயக்கும், தனது 61 ஆவது, படத்தில் நடித்து வருகிறார்.
குறித்த படத்தின் படப்பிடிப்புக்கள், சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரம்மாண்டமான பல அரங்குகள் அமைக்கப்பட்டு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

மேலும், சில காட்சிகள் ஐரோப்பாவில் படமாக்கப்படவுள்ளன.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல்,நித்யா மேனன் ஆகியோரும், சத்யராஜ், வடிவேலு, சத்யன் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் வில்லனாக இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார்.

ரகுமானின் இசையில் இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ,தனது 100 ஆவது படம் என்பதால், மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இதில், விஜய் 3 கதாபாத்திரங்களில் நடிக்கிறார் எனவும்,இதனால், `மூன்று முகம்’  என்று இப்படத்திற்கு பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

எனினும் படம் குறித்த இரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக விஜய் 61 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல் வெளியீட்டு விழா மற்றும் படத்தின் ரிலீஸ் எப்போது என்பது உள்ளிட்ட தகவல்களை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில்,படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் பிறந்தநதளான ஜுன் 22 ஆம் திகதி வெளியிட்டு, அவரது இரசிகர்களுக்கு விருந்து படைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

மேலும், படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை ஆகஸ்ட் மாதம் பிரம்மாண்டமாக நடத்த ஆயத்த வேலைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. படத்தை வருகிற அக்டோபர் மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாதம் வெளியாகவிருந்த ரஜினியின் `2.0′ ஜனவரி மாதம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. எனவே `விஜய் 61′ படம் தீபாவளி விருந்தாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.