திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
India

கர்ப்பிணி மனைவியை துடிதுடிக்க கொலை செய்தது ஏன்? கணவனின் அதிர்ச்சி வாக்குமூலம்

பகிர: Facebook WhatsApp X Telegram
கர்ப்பிணி மனைவியை துடிதுடிக்க கொலை செய்தது ஏன்? கணவனின் அதிர்ச்சி வாக்குமூலம்

ஆந்திராவில் 24 வயதான இளம் கர்ப்பிணி மனைவியை துடிதுடிக்க கொலை செய்த வழக்கில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆசிப் நகரில் வசித்து வந்த சாலினி என்ற இளம் கர்ப்பிணி தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இவருக்கும், விஜயகுமார் என்பவருக்கும் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

மதுபோதைக்கு அடிமையான விஜயகுமார், திருமணமான நாள் முதல் சாலினியை அடித்து சித்ரவதை செய்துள்ளார். மேலும் அசிங்கமான வார்த்தைகளால் திட்டுவதை வழக்கமா கொண்டுள்ளார்.

இதனால் இவர்கள் இருவருக்கும் பிரச்சனை இருந்து வந்தது. இதற்கிடையில் தான் சாலினி கர்ப்பமாகியுள்ளார். வழக்கம்போல வீட்டுக்கு வந்த விஜயகுமார், கர்ப்பிணியாக இருந்த சாலினியிடம் பிரச்சனை செய்துள்ளார்.

இந்த வாக்குவாதத்தில் கோபமடைந்த விஜயகுமார், கர்ப்பிணி மனைவி என்றும் பாராமல், தலையில் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

மனைவியை கொலை செய்துவிட்டு, நடந்தவை குறித்து பொலிசில் வாக்குமூலமாக அளித்து சரணடைந்துள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்