திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

தனியார் வங்கியொன்றில் குண்டு- மட்டக்களப்பு நகரில் பதற்ற நிலமை

பகிர: Facebook WhatsApp X Telegram
பலரை பலியெடுத்த குண்டு வெடிப்பு சம்பவங்கள்! மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய நிலை

மட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் வங்கியொன்றில் குண்டிருப்பதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து அங்கு படையினரால் தீவிர தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்காரணமாக மட்டக்களப்பு நகரில் பதற்ற நிலமையேற்பட்டதுடன் பின்னர் நகரம் வழமைக்கு திரும்பியது.

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் அரசடியில் உள்ள தனியார் வங்கியொன்றில் குண்டிருப்பதாக இன்று காலை பொலிஸ் அவசர சேவைக்கு தகவல் கிடைத்துள்ளது. கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு சென்று குண்டு செயலிழக்கச்செய்யும் படையினர் மற்றும் பொலிஸார் தீவிர சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

குறித்த தனியார் வங்கியின் ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு சுமார் ஒரு மணி நேரம் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது கல்முனை-மட்டக்களப்பு வீதியின் போக்குவரத்து அரசடி சந்திவரையில் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் காரணமாக மட்டக்களப்பு நகரில் பதற்ற நிலமையேற்பட்டதுடன் ஏனைய வங்கிகளும் தமது நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டன.

எனினும் குறித்த பகுதியில் எந்தவிதமான வெடிபொருட்களும் மீட்கப்படாத நிலையில் நகரின் நிலைமை வழமைக்கு திரும்பியது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்