உங்கள் வீட்டில் இருக்கும் தீய சக்திகள் நீங்கி நன்மை ஏற்படணுமா? இந்த பரிகாரத்தை செய்து பாருங்க

நம்மால் உணர முடியாத பல நுட்பமான தீய அதிர்வுகள் வீட்டில் நிறைந்திருந்தால் எந்நேரமும் காரணமின்றி சண்டை சச்சரவுகள், வாக்குவாதங்கள் ஏற்படும் என்று நமது முன்னோர்கள் அடிக்கடி நம்மிடம் கூறுவார்கள்.

ஆன்மீகப்படி இத்தகைய பிரச்சனைகள் நீங்கி குடும்ப ஒற்றுமையும், மகிழ்ச்சியும் ஏற்படுவதற்கான ஒரு பரிகார முறை ஒன்று உள்ளது. தற்போது இந்த பரிகார முறையை பற்றி இங்கு பார்ப்போம்.

பரிகாரம்
தினமும் மாலை வேளைகளில் சிறிது மஞ்சள் எடுத்து, வீட்டு வாசல் படியின் இரண்டு புறத்திலும் இரண்டு சதுரங்களை வரைந்து கொள்ள வேண்டும்.

அந்த இரண்டு சதுரங்களிலும் ஒரு வேப்பிலையை வைக்க வேண்டும். வேப்பிலையின் நுனி கிழக்கு அல்லது வடக்கு திசையை பார்த்தவாறு இருப்பது நல்லது.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

பிறகு அதன் மீது மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளை வைத்து, எண்ணை ஊற்றி, மஞ்சள் நிற திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

மேற்கண்ட முறையில் தினமும் மாலை வேளைகளில் தீபம் ஏற்றி வந்தால் அந்த வீட்டில் இருக்கின்ற எதிர்மறையான விடயங்கள் அனைத்தும் விரைவிலேயே நேர்மறையான ஆற்றல்களாக மாறுவதை நாம் காணலாம்.

பலன்கள்

  • குடும்பத்தில் நீடித்து வந்த சண்டை சச்சரவுகள், மனஸ்தாபங்கள் போன்றவை நீங்கும்.
    பிறருடன் விரோதம் ஏற்படுவது, எதிரிகளால் நமக்கு பாதிப்புகள் ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
  • கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்துவாழும் தம்பதியர்கள் இந்த பரிகாரம் செய்வதால் கூடிய விரைவில் ஒன்றிணைந்து வாழ ஆரம்பிப்பார்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like