இன்றைய ராசிபலன் 26-05-2019

மேஷம்: மேஷம்: தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. பிற்பகலுக்கு மேல் சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்களிடத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

நண்பர்களின் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் விற்பனை எப்போதும்போல் இருக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

ரிஷபம்: உடல் நலனில் கவனம் செலுத்தவேண்டிய நாள். சகோதரர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. சிலருக்கு திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வீண் செலவுகள் அதிகரிக்கும். திடீர் பயணத்தால் உடல் அசதி உண்டாகும். வீட்டில் பராமரிப்புப் பணிகள் அதிகரிக்கும்.

குடும்பத்தில் மற்றவர்களிடம் எந்த உதவியும் கிடைப்பதற்கில்லை. வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் சுபச் செலவுகள் ஏற்படக்கூடும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

மிதுனம்: இன்று குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும், பாதிப்பு இருக்காது. உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். தாய்வழியில் திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். சிலருக்கு நீண்டநாளாக முடியாமல் இருந்த தெய்வ பிரார்த்தனைகளை நிறை வேற்றும் வாய்ப்பு ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

வியாபாரத்தில் பங்குதாரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உண்டு.

கடகம்: எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். தாய்மாமன் வகையில் நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி இன்று கிடைக்கக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். குடும்பப் பொறுப்புகள் அதிகரித்தாலும்,உறவினர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வது ஆறுதல் தரும்.

வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையின் தேவையைப் பூர்த்தி செய்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

சிம்மம்: புதிய முயற்சி சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாலையில் வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களை தரிசித்து ஆசி பெறும் வாய்ப்பு ஏற்படும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.

கன்னி: உற்சாகமான நாள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு உறவினர் அல்லது நண்பர்கள் மூலம் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். உறவினர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

வியாபாரத்தில் பணியாளர்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

துலாம்: மனதில் வீண் குழப்பங்கள் தோன்றி மறையும். ஆனால், புதிய முயற்சி சாதகமாக முடியும். குல தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் நலனில் கவனம் தேவை. வீட்டில் உறவினர்கள் வருகையால் பணிச்சுமை அதிகரிக்கும் என்றாலும், உறவினர் சந்திப்பால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

சக வியாபாரிகளால் பிரச்னை ஏற்படும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக இருப்பது அவசியம். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

விருச்சிகம்: மனதில் உற்சாகம் ஊற்றெடுக்கும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். துணிச்சலாக முடிவெடுப்பீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். உங்கள் ஆலோசனை குடும்பப் பெரியவர்களால் பாராட்டப்படும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூர்ப் பயணமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளையும் பயணம் மேற்கொள் வதையும் தவிர்க்கவும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

தனுசு: புதிய முயற்சியில் ஈடுபடுவதை தவிர்க்கவும். காரியங்கள் இழுபறியாக முடியும். தேவையான பணம் இருந்தாலும், எதிர்பாராத செலவுகளால் மனச் சஞ்சலம் உண்டாகும். சகோதர வகையில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும்.

வியாபாரத்தில் விற்பனைக்கேற்ற லாபம் கிடைப்பதற்கில்லை. மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிரசித்தி பெற்ற கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

மகரம்: உற்சாகமான நாள். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கி, அந்நியோன்யம் ஏற்படும். முக்கிய முடிவில் வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். குடும்பத்துடன் கோயில்க ளுக்குச் சென்று வருவீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும்.

லாபமும் அதிகரிக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் ஏற்படும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும்.

கும்பம்: தேவையான பணம் கையில் இருந்தாலும், எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரைவதுடன், சிலர் கடன் வாங்கவும் நேரிடும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு மகான்களின் அதிஷ்டானங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்ப டும். குடும்பத்தில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியுடன் ஆதாயமும் தருவதாக இருக்கும்.

வியாபாரத் தில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.

மீனம்: எதிர்பாராத பணவரவுக்கும் பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு வாக்குவாதம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைப் பதில் தாமதம் ஏற்படக்கூடும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like