வக்ரமாகும் குரு! பண மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்! யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது தெரியுமா..! – இன்றைய ராசிபலன்

ராசிபலன் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாகும்.

அந்த அமைப்பே அவனது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான அன்றாட கடமைகளை ஆரம்பிக்கும் முன் சிலர் அன்றைய தினத்திற்கான ராசிபலனை பார்க்கின்றனர்.

அந்த வகையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிகமான சிந்தனை உடைய நாளாக இருக்கும். எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் அதை செய்வதற்கு முன்பு சிந்தித்துக்கொண்டே இருப்பீர்கள். ஆனால் அதை செயல்படுத்த முடியாத சூழ்நிலை நிலவும். ஆகவே நிறைய நேரம் வீணாவதற்கு வாய்ப்புகள் உள்ளது. நேரத்தை மிச்சப்படுத்த, புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். புதிய சிந்தனைகளை இன்று சிந்திக்க வேண்டாம். அன்றாட வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். புதிய முயற்சிகளை நாளை தள்ளி போடுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கை ரொம்ப ரொம்ப அழகாக தெரியும். மனதிற்கு பிடித்தவர்கள், அவர்களே வந்து உங்களுடன் பேசுவார்கள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். நீங்கள் கல்யாணம் ஆனவர்களாகவே இருந்தாலும் கணவன் மனைவிக்குள் ஒரு அன்னியூன்யமான உறவு ஏற்படும். அது உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்க கூடிய வகையில் அமையும். குழந்தைகளோடு மனைவியோடு இன்று நேரத்தை செலவு செய்யக்கூடிய நாள். இதோடு சேர்த்து வேலை வியாபாரம் எல்லாம் உங்களுக்கு முன்னேற்ற பாதையில் செல்லும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று அமோகமான வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. நீங்கள் எதைத் தொட்டாலும் அது உங்களுக்கு பாராட்டை கொடுக்கும். வெற்றியை கொடுக்கும். இதனால் லேசாக உங்களுக்கு தலைகனம் வரவும் வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். குறிப்பாக பிரபல்யமாக இருப்பவர்களுக்கு இன்றைய நாள் அடக்கம் ரொம்ப ரொம்ப தேவை. சினிமா துறையில் இருப்பவர்கள், அரசியல் துறையில் இருப்பவர்கள் அல்லது பெரிய பதவியில் இருப்பவர்கள் இன்று கொஞ்சம் அமைதி காக்கவும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கூடுதல் இருக்க வேண்டும். ஐயோ பாவம் என்று அடுத்தவர்களுக்கு உதவி செய்தால் அந்த பணம் திரும்பவும் வராது. கொஞ்சம் மனதை கல்லாக்கிக் கொள்ளுங்கள். இன்றைய தினம் நீங்கள் அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது கூட யோசிக்க வேண்டியதாகத்தான் இருக்கும். இன்று நீங்கள் நல்லதே செய்தாலும் அது உங்களுக்கு கெட்டதாக வந்து முடியும் பார்த்துக்கோங்க.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் டென்ஷன் அதிகமாக இருக்கும். செய்ய முடியாத அளவுக்கு வேலைகள் வரும். உடல் சோர்வு உண்டாகும். இதனால் கொஞ்சம் கோபம் வெளிப்படும். உங்கள் கூட இருக்கிறவங்க மனைவி நண்பர்கள் எல்லோரையும் கன்னா பின்னான்னு திட்ட போறீங்க. இதனால் எல்லோருக்கும் எரிச்சல் வர வாய்ப்பு உள்ளது. ஆகவே பொறுமையாக இருங்க. முடிந்த வேலைகளை மட்டும் செய்யுங்கள். முடியாத வேலையை இழுத்துப் போட்டுக் கொள்ள வேண்டாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தைரியம் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக உங்களை டார்கெட் செய்து ஒதுக்க நினைத்தவர்களை, எதிர்த்துப் போராடி வெற்றி காண்பீர்கள். குட்ட குட்ட குனிந்து கொண்டே இருந்தால் நிச்சயம் முன்னேற முடியாது என்பதை புரிந்து கொள்வீர்கள். உங்களுக்கு பிரச்சனை கொடுப்பவர்களை, நீங்கள் அடித்து விரட்ட வேண்டாம். சும்மா திரும்பி யாவது பாருங்க. அவர்களே தானா ஓடிடுவாங்க. எதற்கும் பயப்படாதீங்க.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உணர்ச்சிவசப்பட்டு தவறுகள் செய்யக்கூடிய நாளாக இருக்கும். அதாவது இன்று பொறுமையாக இல்லை என்றால் உங்களுடைய முடிவுகள் தவறாக மாறிவிடும். யாராவது வந்து உங்களை உசுப்பேத்தும்படி பேசினால் அதற்கு பின்னால் என்ன உள்நோக்கம் இருக்குன்னு பாருங்க. அவர்கள் பேச்சுக்கு நீங்க பலியாகிடாதீங்க. மொட்டை மாடியில் இருந்து குதி என்று சொன்னால் குதித்து விடுவீர்களா? கிணற்றில் குதி என்றால் குதிப்பீர்களா. அதே போல தான் இந்த பிசினஸில் நீ முதலீடு செய் என்று சொன்னால் அதற்கு ஆயிரம் முறை நீங்கள் யோசிக்க வேண்டும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கை சிறப்பாக இருக்கப் போகின்றது. ஆரோக்கியம் மேம்படும். பெரிய மனிதர்கள் சந்திப்பு உங்களுக்கு பெரிய அளவில் முன்னேற்றத்தை கொடுக்கும். எதிர்பாராத நல்லது உங்கள் வீட்டு வாசல் கதவை தட்டும். அந்த வாய்ப்பை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். குறிப்பாக மாணவர்களுக்கு வரக்கூடிய வாய்ப்புகள் மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்தை தரக்கூடியதாக அமையும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று டார்கெட்டிங் முடிக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத ஒரு ஆர்டர் உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனையை உண்டு பண்ணும். இன்றைய நாளை உபயோகமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்கக்கூடிய நேரமும் காலமும் கைக்கோடி வரும். அதற்கான வருமானம் வரக்கூடிய வேலைகளில் இன்று நீங்கள் முயற்சி செய்யலாம்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நாள் பொழுதுபோக்கான நாளாக செல்லும். வேலையாக இருந்தாலும் சரி, தொழிலாக இருந்தாலும் சரி, அந்த இடத்தில் அரட்டை அடித்துக் கொண்டே இருப்பீர்கள். இன்று நகைச்சுவையாக பேசக்கூடிய திறன் உங்களிடத்தில் இருந்து வெளிப்படும். நீங்கள் மட்டும் அல்ல உங்களை சுற்றி இருப்பவர்களையும் இன்று நீங்கள் சந்தோஷமாக வைத்துக் கொள்ளப் போகிறீர்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று சக மனிதர்களிடம் உஷாராக பழக வேண்டும். நண்பர்களாகவே இருந்தாலும் அவர்கள் உங்களுக்கு இன்று எதிரியாக மாற வாய்ப்புகள் உள்ளது. குடும்ப விஷயத்தை எல்லாம் கொண்டு போய் வெளி மனிதர்களிடம் சொல்லாதீங்க. சோசியல் மீடியாவில் நீங்கள் அதிகமாக இருப்பவர்களாக இருந்தால், குடும்பம் சந்தோஷமாக இருக்கக்கூடிய புகைப்படத்தை வெளியில் அதிகமாக பகிர வேண்டாம். கண் திருஷ்டி விழ வாய்ப்பு உள்ளது.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். வேலையில் எவ்வளவுதான் கவனம் இருந்தாலும், வேலையில் முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும், உங்களுடைய உடல் சூழ்நிலை அந்த வேலையை செய்ய விடாமல் தடுக்கும். ஆரோக்கியத்தை முதலில் கவனியுங்கள். ஒரே நாளில் எதையும் சாதிக்க முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக முயற்சிகளை மேற்கொள்ளும் போது, ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் ஏற்படும். தினமும் ஒரு குறிக்கோளை மனதில் வைத்து செயல்படுத்தினால் மட்டுமே உங்களுக்கு வெற்றி.