சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking
Biggboss

தர்ஷனை டார்கெட் செய்யும் வனிதா! அடுத்த குறும்படம் யாருக்கு தெரியுமா? பூதகரமாக வெடித்த பிரச்சினை

பகிர: Facebook WhatsApp X Telegram
தர்ஷனை டார்கெட் செய்யும் வனிதா! அடுத்த குறும்படம் யாருக்கு தெரியுமா? பூதகரமாக வெடித்த பிரச்சினை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சபாஷ் சரியான போட்டி என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இது ஒரு விவாதமாக அமைந்தது. ஏற்கனவே பிக்பாஸ் வீட்டுக்குள் ஆண்கள் பெண்களும் பிரிந்திருப்பதாக பல போட்டியாளர்கள் கூறி வருகின்றனர்.

அதற்கு ஏற்றார் போன்று, இந்த விவாத டாஸ்க்கில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக பிரிந்தனர்.

சிறந்த தலைவர்களாக இருந்தவர்கள் யார்..? சமைக்க தெரிந்தவர்கள் யார்..? தொடர்பான விவாதங்களில் பெண்கள் அணியினர் வெற்றி பெற்றனர்.

இதில் பலரும் கஸ்தூரியின் சமையலை பலரும் கலாய்த்தனர். அவரும் சேர்ந்து சிரித்து விவாதத்தை கலகலப்பாக்கினார்.

பிறகு வனிதாவும், தர்ஷனும் விவாதத்தில் பேசும் போது சர்ச்சை ஏற்பட்டது. சிறு விடயங்களுக்கும் அதிகம் கோபப்படுவதாக தர்ஷனிடம் கேள்வி எழுப்பினார்.

தேவையில்லாத விடயங்களுக்கு சண்டை போடுவது இல்லை.

தேவையிருந்தால் தான் பேசுவது என்று தர்ஷன் கூற நான் தர்ஷனுக்கு குறும்படம் போட சொல்லுவேன் என்று வனிதா கத்துகின்றார். இது சற்று பூகம்பமாக வெடித்திருந்தது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்