ரயிலுக்கடியில் சிக்கிய பெண்ணால் அதிர்ச்சி, பதைபதைப்பு! உயிருடன் மீண்டாரா?

ரயிலுக்கும் தண்டவாளத்துக்கும் இடையே சிக்கிக் கொண்ட பெண்ணொருவர், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சம்பவம் அதிர்ச்சியையும் பதைபதைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

கர்நாடகா மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையமொன்றில் பெண்ணொருவர் ரயில் நடைமேடையிலிருந்து இறங்கி தண்டவாளத்தை கடக்க முயன்றார். அவ்வேளை ரயில் ஒன்று வேகமாக வந்துள்ளது. உடனே அப்பெண் ரயில் தண்டவாளத்தில் உடலை குறுக்கியபடி படுத்துக்கொண்டார்.

ரயில் சென்ற சிறிது நேரத்தில் அப்பெண் உயிருடன் மீட்கப்பட்டார். இதில் அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை பார்த்த ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் பெரும் பதைபதைப்படைந்தனர்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like