செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking
முக்கிய செய்திகள்

சவாலான சிங்களப் பெண்களுக்கு மத்தியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த ஈழத்துப் பெண்!

பகிர: Facebook WhatsApp X Telegram
சவாலான சிங்களப் பெண்களுக்கு மத்தியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த ஈழத்துப் பெண்!

பதுளையில் நடைபெற்று வரும் 45ஆவது தேசிய விளையாட்டு விழா நிகழ்வில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த பெண் தக்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

வடக்கு மாகாணத்திற்கான வீராங்கனை அனிதா ஜெகதீஸ்வரன் காயமடைந்திருந்த நிலையில் காயத்திலிருந்து மீண்டு வந்து தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

தேசிய விளையாட்டு விழாவின் முதல் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடைப்பெற்ற மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலிலேயே அனிதா தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

இவர் 3.30 மீற்றர் உயரம் தாண்டி தங்கத்தை தனதாக்கிக் கொண்டார்.

இதில் வெள்ளிப் பதக்கத்தை மேல் மாகாண வீராங்கனை உதேனி வென்றார். இவர் 3.10 மீற்றர் உயரம் தாண்டினார். வெண்கலப் பதக்கத்தை 3.00 மீற்றர் உயரம் தாண்டிய மேல் மாகாண வீராங்கனை எஸ்.கே.பெரேரா வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்