சிம்ம ராசிக்காரர்களே இன்று உஷார்…. இதைமட்டும் அடுத்தவர்களிடம் சொல்லாதீங்க!

மேஷம்
சொந்த நலனில் அக்கறை கொள்வீர்கள். அவப்பெயர் வராமல் செயல்பட வேண்டும். தொழில், வியாபரத்தில் கூடுதல் பணி உதவும். அளவான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத வாசனைப் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.

ரிஷபம்
சிறு செயலையும், நேர்த்தியுடன் செய்வீர்கள். வெற்றி பெற எளிதான வழிபிறக்கும். தொழில் வியாபாரம் வியப்பூட்டும் வகையில் செழிக்கும். நிலுவைப் பணம் வந்து சேரும். விலகிய உறவினர் சொந்தம் பாராட்டுவர்.

மிதுனம்
நேர்மை குணம் அதிகம் பின்பற்றுவீர்கள். திறமை வளர்ந்து நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அடைவீர்கள். பணம் கொடுக்கல், வாங்கல் சீராகும். நண்பருடன் விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

கடகம்
செயல்களில் நிதானம் வேண்டும். சகதொழில் சார்ந்தவரிடம் சச்சரவு பேசக்கூடாது. தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பணவரவில் முன்னேற்றம் உண்டு. பயன்தராத பொருளை விலைக்கு வாங்க வேண்டாம்.

சிம்மம்
மனதில் நம்பிக்கை வளர்ப்பது அவசியமாகும். தொழில், வியாபாரத்தில் உள்ள குறைகளை பிறரிடம் சொல்ல வேண்டாம். அதிக நிபந்தனையுடன் கடன் பெறக்கூடாது. வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

கன்னி
பலநாள் தாமதமான பணி எளிதாக நிறைவேறும். தொழிலில் உற்பத்தி, விற்பனையில் அனுகூலம் கிடைக்கும். பணப்பரிவர்த்தனையில் முன்னேற்றம் உண்டு. மாமன், மைத்துனருக்கு உதவுவீர்கள்.

துலாம்
குடும்பத்திற்கான தேவை அதிகரிக்கும். பழகியவர்களில் சிலர் உதவுவது போல பேசுவர். தொழில், வியாபாரம் வளர்ச்சிக்கு சில மாற்றம் செய்வீர்கள். பணவரவு கிடைக்க தாமதம் ஆகலாம். மாணவர்கள் படிப்பில் உரிய கவனம் தேவை.

விருச்சிகம்
பேச்சில் உறுதி நிறைந்திருக்கும். உயர்ந்த செயல்களால் நன்மதிப்பை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் குறுக்கிட்ட இடையூறு விலகும். உபரி வருமானம் கிடைக்கும். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.

தனுசு
செயல்திறன் கண்டு சிலர் பொறாமை கொள்வர். பொறுமை காப்பதால் சிரமம் தவிர்க்கலாம். தொழில் வளர்ச்சி பெற கூடுதல் பணிபுரிவது அவசியமாகும். செலவு அதிகரிக்கும். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.

மகரம்
பேச்சில் ரசனை மிகுந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி புதிய அனுபவம் தரும். நிலுவைப்பணம் வசூலாகும். குடும்ப பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். மனைவியின் அன்பில் மகிழ்வீர்கள்.

கும்பம்
சிலர் உங்களுக்கு தவறான ஆலோசனை சொல்வர். எதிர்கால நலன் கருதி விலகுவது நல்லது. தொழிலில் குறையை சரி செய்வதால் உற்பத்தி, விற்பனை சீராகும். தியானம், தெய்வ வழிபாடு அமைதி தரும்.

மீனம்
வாழ்வில் முன்னேற்றம் பெற புதிய வாய்ப்பு வரும். சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி நிறைவேறும். உபரி பணவருமானம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி அதிகரிக்கும்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like