ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking
Astrology

இன்றைய ராசிபலன் 22-02-2018

பகிர: Facebook WhatsApp X Telegram

மேஷம்: புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்மாமன் மூலம் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். அலுவலகத்தில் அதிகாரிகளால் பாராட்டப்படும் சந்தர்ப்பம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பயணம் தவிர்க்கவும்.

விளம்பரம்

ரிஷபம்: அனுகூலமான நாள். உற்சாகமாகக் காணப்படுவீர்கள். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் உற்சாகமாகச் செய்வீர்கள். வியாபாரத்தில் பிற்பகலுக்கு மேல் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும்.. கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

மிதுனம்: தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பிற்பகலுக்கு மேல் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படக்கூடும்.

விளம்பரம்

கடகம்: புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. புதிய முயற்சி சாதகமாக முடியும். தாயின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

சிம்மம்: அதிர்ஷ்டகரமான நாள். புதிய முயற்சிகளைத் தொடங்குவது சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். தாய் வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். மாலையில் உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் . அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கன்னி: இன்று பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்ற பாடுபடவேண்டி இருக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வது ஆறுதலாக இருக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்லும் அறிவுரையைக் கேட்டுக் கொள்வார்கள். அலுவலகத்தில் சக பணியாளர்கள் அனுசரனையாக நடந்து கொள்வார்கள். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

துலாம்: எந்த முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. குடும்பத்தில் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதுடன் அவர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். கணவன் – மனைவிக்கு இடையில் சிறு பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். ஆனால், தெய்வ அனுக்கிரகம் பரிபூரணமாகக் கிடைக் கும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

விளம்பரம்

விருச்சிகம்: அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். ஆனால், புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம்ஏற்படக்கூடும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஆதாயம் பெறும் வாய்ப்பு உண்டு. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

தனுசு: எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் வந்து சேரும் நாள். தொடங்கும் காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படக்கூடும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவை பிற்பகலுக்கு மேல் எடுக்கலாம். சிலருக்குப் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்கள் வழியில் சுபச்செலவு ஏற்படக்கூடும்.

மகரம்: உற்சாகமான நாள். தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வாழ்க்கைத்துணை உறவுகளால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக் கூடும்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை சற்று இழுபறிக்குப் பிறகு கிடைத்துவிடும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் அனுகூலம் உண்டாகும்.

கும்பம்: உற்சாகமான நாள். சகோதரர்களால் ஆதாயமும் இருக்கும்; அலைச்சலும் இருக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாலையில் உறவினர்கள் வருகையால் சிறு சங்கடம் ஏற்படலாம். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும்.

விளம்பரம்

மீனம்: அனுகூலமான நாள். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கு வாய்ப்பு உண்டு. தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளை ஏற்கவேண்டி இருக்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram
விளம்பரம்

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்