இன்றைய (11.02.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ

மேஷம் : வளர்ச்சிக்கு உதவியவகளை சந்தித்து  உள்ளம் மகிழும் நாள்.புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். . குடும்பத்தில் ஏற்பட்டு வாக்குவாதங்கள் படிப்படியாக மறையும்.

ரிஷபம் : இனிய சம்பவமானது இல்லத்தில் நடைபெறுகின்ற நாள். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். உங்களை வேண்டாம் என்று விலகிச் சென்றவர்கள் மீண்டும் விரும்பி வந்து சேருவர். பாதியில் நின்ற விட்ட பணிகள் துரிதமாக முடியும். பொதுநலத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

மிதுனம் : மனம் நினைக்கும்  எண்ணங்கள் ஈடேறுகின்ற நாள். வியாபாரத்தில் இருந்து வந்தப் போட்டிகள் அகலும். அன்றாடம் செய்கின்ற பணிகள் சிறப்பாக நடைபெறும்.உற்ற நண்பர்கள் மனதிற்கு இனிய தகவலைக் கொண்டுவந்து சேர்ப்பர். புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும்.

கடகம் : குடும்ப பொறுப்புகள் ஒரு படி கூடுகின்ற நாள். ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். தாமதமாகிய காரியங்கள் எல்லாம் இன்று கட்சிதமாக நடைபெறும். வாகனங்களில் செல்லும் பொழுது சற்று கவனம் தேவை.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

சிம்மம் :  நீண்ட நாளாக நினைத்து வந்த எண்ணம் நிறைவேறும் நாள். வரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்களின் உதவி தொழில் முன்னேற்றத்திற்கு வித்திடும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.

கன்னி : காலை நேரம் மிகவும் கலகலப்பாக அமைகின்ற வகையில் மகிழ்ச்சி காணுவீர்கள். கொடுக்கல் மற்றும் வாங்கல்கள் ஒழுங்காகும். இடம் வாங்குகின்ற முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். தொலைதூரப் பயணங்கள் செல்வீர்கள். உறவினர் வருகை உண்டு.

துலாம் : வாகன யோகத்தால் வளங்கள் அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் மத்தியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். பூர்வீக சொத்துத்தில் உள்ள வில்லங்கங்கள் அகலும். குழந்தைகளின் முன்னேற்றம் கருதி செயல்பட்டதற்கு வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம் :  அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கின்ற நாள். புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். அக்கம் பக்கத்து பகை மாறும். சிக்கல்களை செல்வந்தர்களின் ஒத்துழைப்போடு சமாளித்து விடுவீர்கள்.

தனுசு :  தன்னம்பிக்கையானது பலமடங்கு அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் அமைதி நிலவும். தந்தை  வழியில் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அதிகஅக்கறை காட்டி மகிழ்வீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் உங்கள் தொழில் வளர்ச்சி உதவும்.

மகரம் : இறைவழிபாட்டால் இன்பம் காண வேண்டிய நாள் எதிலும் நிதானத்தை கடைபிடியுங்கள். வீண் வாக்குவாதங்களை எல்லாம் தவிர்ப்பது நல்லது.அன்றாட பணிகளை சுறுசுறுப்போடு செய்து முடிப்பீர்கள்.

கும்பம் :  நினைத்த காரியம் நிறைவேறும் நாள்.மன நிம்மதிக்காக சிறு பயணங்களை மேற்கொள்வீர்கள். நேற்று நடைபெற்ற பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். இடமாற்றம் மற்றும்  ஊர்மாற்றம் போன்றவைகள் எதிர்பார்த்தபடி அமைய வாய்ப்புள்ளது.

மீனம் :  இதுவரை முட்டுக்கட்டையாக இருந்து வந்த தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்திகரமாக தரும். இல்லத்தில் இனிய  சம்பவங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன. மாற்றுக் கருத்து கொண்டோர் மனம் மாறுவர். வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் அகலும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like