பள்ளி வகுப்பில் ஆசிரியைகள் செய்த அதிர்ச்சி காரியம்.. இணையத்தில் லீக்கான வீடியோ..!

பள்ளி வகுப்பறையில் 5 ஆசிரியர்கள் முன்னிலையில் ஹிந்தி பாடலுக்கு ஒரு ஆசிரியர் நடனமாடும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

லக்னோவில், மத்திய அரசாங்கம் ஏற்பாடு செய்த NISHTHA என்னும் பயிற்சி வகுப்பிற்கு சுமார் 150 பள்ளி ஆசிரியர்கள் அழைக்கப்பட்டிருந்துள்ளனர். அப்போது ஒரு ஆசிரியை அனைவர் முன்பும் நடனம் ஆட, சக ஆசிரியர்கள் அவரை கைதட்டி உற்சாகப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் நடனம் ஆடிய ஆசிரியை உட்பட 6 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.