புதன், ஒக்டோபர் 28, 2026
Breaking
Astrology

ராகு காலத்தில் இந்த அம்மனை வழிபடுங்கள்!… கஷ்டங்கள் நீங்கும்

பகிர: Facebook WhatsApp X Telegram
2020 இல் ஆட்டிப்படைத்த ஏழரை சனியே ராகு கேது பெயர்ச்சியால் அள்ளித்தருவார்! இந்த 4 ராசிக்காரர்களுக்கும் ராஜ வாழ்க்கை தான்

ராகு கால நேரத்தில் நல்ல காரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என நமது பெரியோர்கள் கூறுவதுண்டு.

புராணங்களின் படி ஒரு நாளில் உள்ள இருபத்தி நாலு மணி நேரத்தில் 1½ மணி நேரம் ராகுவும், 1½ மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றன.

அதில் ராகு வழிபாடு செய்யும் நேரம் ‘ராகு காலம்’ என்றும், கேது வழிபாடு செய்யும் நேரம் ‘எமகண்டம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

பொதுவாக மற்ற கிரகங்களின் ஆற்றல் அந்த நேரத்தில் குறைந்திருக்கும் என்பதால்தான், ராகு காலத்தில் சுப காரியங்களைத் தவிர்க்க வேண்டும் என கருதப்படுகின்றது.

அதே சமயம் ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிப்பட்டால் சிறப்பு பலன்களை தருகிறது எனப்படுகின்றது.

அதிலும் செவ்வாய் கிழைமை ராகு காலத்தில் துர்க்கையை பூஜிப்பது சிறப்பு மிகுந்ததாக கருதப்படுகிறது.

மேலும் செவ்வாய், ராகு ஆகிய கிரகங்களால் தோஷம் இருந்தாலோ அல்லது வாழ்வில் தடைகளும், துன்பங்களும் தொடர்ந்தாலோ ராகு கால வழிபாட்டினை மேற்கொண்டு, துர்க்கையை வழிபடுவது நற் பலன்களை தருகின்றது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்