செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking
Srilanka

அதிரடியாக பதவிநீக்கப்பட்ட வடக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் !

பகிர: Facebook WhatsApp X Telegram
வடமாகாண ஆளுநா் தொடர்பில் அதிகாரிகள் விசனம்! அம்பலமான கடிதம்

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.தெய்வேந்திரன் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் இந்த பதவிநீக்க உத்தரவை வழங்கியுள்ளார்.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலாளராக கே.தெய்வேந்திரன் கடந்த மார்ச் 4ஆம் திகதி தொடக்கம் மீளவும் அந்தப் பதவியில் தொடர் ஆளுநரால் கடிதம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் மார்ச் 4ஆம் திகதிய நியமனக் கடிதத்தை இன்று நடைமுறைக்கு வரும்வகையில் மீளப்பெறுவதாக ஆளுநரால் நேற்று கடிதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் சுகாதார அமைச்சின் செயலாளர் கே.தெய்வேந்திரன் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்