செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking
Srilanka

பட்டதாரிகளுக்கான நியமன பெயர்ப் பட்டியல் அரச நிர்வாக இணையத்தளத்தில் வெளியீடு

பகிர: Facebook WhatsApp X Telegram
70,000 விண்ணப்பங்கள்; 42,000 பட்டதாரிகளுக்கு நியமனம்: 3 நாள்களுக்குள் பிரதேச செயலரிடம் அறிக்கையிடவேண்டும்

தொழில் வாய்ப்பு அற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் தகுதி பெற்றவர்களின் பெயர்ப்பட்டியல் இன்று அரச நிர்வாக இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

45 ஆயிரத்து 585 பட்டதாரி பயிலுநர் நியமனம் பெற்றவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கடிதம்  Download

முல்லைத்தீவு  Download

கிளிநொச்சி  Download

யாழ்ப்பாணம்  Download

ஏனைய மாவட்டங்கள் இணைக்கப்படும்…

நியமனக்கடிதம் கிடைக்கப்பெற்று 3 நாட்களுக்குள் இவர்கள் தமது பிரதேச செயலாளர் பிரிவிற்கு சமூகமளிக்க வேண்டும் என்று நியமனக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டடிருந்த போதிலும் நியமனக்கடிதம் கிடைக்கப்பெறாதோர் இது தொடர்பில் எந்தவித சந்தேகத்தையும் ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை.

கடிதம் கிடைக்கப்பெற்ற 7 நாட்களுக்கு பயிற்சிக்கு சமூகமளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும் இது தற்பொழுது நடைமுறையில் இல்லை. தேர்தல் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கு அமைய பொது தேர்தல் நிறைவடைந்து 5 நாட்களுக்கு பின்னர் பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்