திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Cinema

விருது விழாவில் மேடையில் சுழன்று சுழன்று சிலம்பம் சுத்திய ஜோதிகா! தீயாய் பரவும் காட்சி

பகிர: Facebook WhatsApp X Telegram
விருது விழாவில் மேடையில் சுழன்று சுழன்று சிலம்பம் சுத்திய ஜோதிகா! தீயாய் பரவும் காட்சி

நடிகைகளை கௌரவகிக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் JFW திரைப்பட விருதுகள் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்ற இந்த விருது விழாவில், பல்வேறு பட்டியலின் கீழ் நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

நடிகை ஜோதிகாவுக்கு, பெண்களை மையப்படுத்தி எடுக்கட்ட ‘ராட்சசி’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை 90 களின், இடுப்பழகி நடிகை சிம்ரன் ஜோதிகாவுக்கு வழங்கினார்.

இந்த விருது விழாவில், நடிகை ஜோதிகாவிடம் சிலம்பம் சுத்த சொல்லி அனைவரும் கோரிக்கை வைக்க, ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று கொண்ட ஜோதிகா, மேடையில் அனைவர் முன்பும் சுழன்று சுழன்று சிலம்பம் சுற்றி அசத்தியுள்ளார். இது குறித்த காணொளி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்