ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking
முக்கிய செய்திகள்

இலங்கைக்கு 48 மணி நேர ஓய்வு… மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா! 4 பேர் அடையாளம் காணப்பட்டனர்

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸா? தலைதெறிக்க ஓடிய மக்களால் ஏற்பட்ட பதற்றம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 4 பேர் இன்று மாலை அடையாளம் காணப்பட்டிருக் கும் நிலையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட நோயாளர் எண்ணிக்கை 106ஆக உயர்ந்துள்ளது.

இந்த விடயம் சுகாதார மேம்பாட்டு திணைக்களம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இதன்படி இன்று மாலை 4.45 மணியுடன் நிறைவடைந்த 48 மணி நேரத்தில்

இலங்கையில் எந்தவொரு கொரோனா நோயாளியும் இனங்காணப்படவில்லை. என சுகாதார அமைச்சு அறிவித்திருந்த நிலையில் அந்த அறிவிப்பின் பின்னர் 4 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

சீன பெண் உள்பட 106 நோயாளர்கள் இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களி ல் 6 பேர் குணமடைந்துள்ள நிலையில், 100 பேர் சிகிச்சையில் தொடர்ந்தும் உள்ளனர். இந்நிலையில் பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்