இந்த பொருட்கள் எல்லாம் உங்கள் வீட்டு படுக்கறையில் இருக்கிறதா?.. உடனே அகற்றி விடுங்கள்.. ஏன் தெரியுமா?

வீட்டில் கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை வருவதற்கு சில வாஸ்து காரணங்களும் உள்ளது. இதோடு சேர்த்து சில பொருட்களை நம்முடைய படுக்கை அறையில் வைக்கக் கூடாது.

ஒரு வீட்டின் படுக்கை அறை எந்த திசையை நோக்கி இருக்க வேண்டும்? எந்த பொருட்கள் படுக்கை அறையில் கட்டாயமாக இருக்கக் கூடாது. என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

முதலில் உங்கள் வீட்டு படுக்கை அறை தென் மேற்கு திசை நோக்கி இருப்பது மிகவும் நல்லது. எக்காரணத்தைக் கொண்டும் தென்கிழக்கில், வடகிழக்கிலும் கணவன்-மனைவி தாங்கும் படுக்கை அறை அமைந்து இருக்கக் கூடாது.

முடிந்தவரை வாடகை வீட்டிற்கு செல்வதற்கு முன்பும் இந்த வாஸ்துவை பார்த்துவிட்டு செல்வது தான் மிக நல்லது. இதேபோல் உங்கள் வீட்டு படுக்கை அறையில் சிகப்பு வண்ணத்தில் பெட்ஷீட், தலையணை உறை, ஸ்கிரீன் இவைகள் இல்லாமல் இருப்பது மிகவும் நல்லது.

அடுத்ததாக கண்ணாடி, கடிகாரம், மீன் தொட்டி, தொலைக்காட்சி, கணினி, தையல் மெஷின், தயவு செய்து உங்கள் வீட்டில் இடப்பற்றாக்குறை இருந்தாலும், இந்த பொருட்களை படுக்கையறையில் வைக்கவே வைக்காதீர்கள்.

பீரோவில் கண்ணாடி இருந்தால் கூட, பீரோவை படுக்கை அறையில் இருந்து அகற்றி விடுவது தான் மிகவும் நல்லது. தொலைக்காட்சி, கணினி இவைகளுக்கு நேர்மறை ஆற்றலை குறைக்கும் சக்தி உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி பெட்டியும் கணினியும் வெளியிடும் மின் ஆற்றலானது நேர்மறை சக்தியை அழிக்கும் வல்லமை கொண்டவை என்பதால் முடிந்தவரை உங்களது படுக்கை அறையில் இந்த பொருட்களை எல்லாம் அகற்றி விடுவது மிக நல்லது.

கண்ணாடி, கடிகாரம் இவையெல்லாம் படுக்கை அறைக்குள் மூன்றாவது நபர் இருப்பது போன்று ஒரு அறிகுறியை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாக சொல்லப்பட்டுள்ளது.

மீன் தொட்டியும் கண்ணாடியினால் செய்யப்பட்டது என்பதால் அதையும் தயவுசெய்து படுக்கையறையில் வைத்துக்கொள்ள வேண்டாம்.

தேவையற்ற இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் உங்கள் வீட்டில் ஏதாவது இருந்தால், அதை நீங்கள் உபயோகப் படுத்தாமல் இருந்தால், முடிந்தவரை உங்கள் வீட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டாம்.

பல பேர் படுக்கை அறையில் பரண் மேல் இதைல்லாம் வைத்திருப்பார்கள். அது மிகவும் தவறான ஒன்று. தையல் மெஷின் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களில் அடங்கும். எதிர்மறை ஆற்றலை அதிகரிக்க கூடிய சக்தி இந்த இரும்பு பொருளேக்கு அதிகம் உள்ளது.

ஆகவே முடிந்தவரை படுக்கை அறையில் வேண்டாத இரும்பு பொருட்களையும் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டாம்.