இன்னும் இவங்களுக்கு போதாது! லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரியை மீண்டும் வம்பிழுத்த வனிதா

தன்னைக் குறித்து பல சர்ச்சைகள் சென்று கொண்டிருந்தாலும் வனிதா தனது சந்தோஷத்தில் அதிகமாகவே கவனம் செலுத்தி வருகின்றார்.

சமீபத்தில் பீட்டர் பாலின் பிறந்தநாளை காருக்குள் வைத்துக்கொண்டாடிய வனிதா காணொளியும், புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவை பார்த்து விட்டு, பெயர் குறிப்பிடாமல், பொதுவா சொல்றேன் என்கிற பேர் வழியில் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் ஒரு ட்வீட் பதிவிட்டு இருந்தார்.

நண்பர்களே, கொஞ்சமாவது அறிவு வருமா என நாம் போட்ட உழைப்பு எல்லாம் வீணாகவே போய் விட்டது. மீண்டும் சில புகைப்படங்களையும், வீடியோக்களையும் கொஞ்சம் கூட கவலையே இல்லாம சிலர் பதிவிடுறாங்க, இதனால், லீகல் மனைவி மற்றும் பொதுமக்களுக்கு எரிச்சல் தான் உண்டாகும். பெயர்களை குறிப்பிட விரும்பவில்லை என பதிவிட்டு இருந்தார்.

இதற்கு வனிதாவின் ரசிகர் ஒருவர் ஜெலுசில் புகைப்படத்தினை பதிவிட்டு லட்சுமியை நக்கல் செய்துள்ளார். அந்த கமெண்ட்டை பார்த்து உற்சாகமடைந்த வனிதா அதற்கு லைக் செய்து, கமெண்ட்டும் போட்டுள்ளார்.

கண்டிப்பா.. அது பத்தாது.. குளுகோஸில் ஏற்றுவது போல நிறைய ஏற்றணும், மொத்த ரத்தமும் மாறணும் என மீண்டும் ஒரு சர்ச்சையை கிளறும் வகையில் கமெண்ட் செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி வனிதாவை மீண்டும் தூண்டி விதமாக கஸ்தூரியையும் வைத்து கமெண்ட் செய்துள்ளனர். இதற்கு வனிதாவின் பதில் என்னவென்று தெரியாத நெட்டிசன்கள் இந்த பிரச்சினையை வைத்துக்கொண்டு கோல் போட்டு வருகின்றனர்.