விக்னேஷ் சிவனை விட நயன்தாரா பெரியவரா? இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள்

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இடையிலான வயது வித்தியாசம் குறித்து சூப்பர் தகவல் ஒன்று கசிந்துள்ளது.

நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பின்போது நட்பாக மலர்ந்த இவர்களுடைய உறவு, மெல்ல வளர்ந்து படப்பிடிப்பு முடிவதற்குள் காதலாக வலுப்பெற்றது.

கிட்ட தட்ட 5 வருடங்களாக காதலித்து வருகிறார்கள். இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் அளித்த பேட்டி ஒன்றின் மூலம் நயனுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையிலான வயது வித்தியாசம் குறித்த சுவாரஸ்ய தகவல் கசிந்துள்ளது.

அந்த பேட்டியில் ரகுமான் நீங்கள் 1984ல் பிறந்தவரா? என கேட்பார் அதற்கு விக்கி, இல்லை 1985 என பதிலளிப்பார். அதாவது விக்னேஷ் சிவனின் பிறந்த நாள் 1985ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆகும்.

நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவோ 1984ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் தேதி பிறந்தவர். இதன் மூலம் விக்னேஷ் சிவனை விட நயன்தாரா 10 மாதங்கள் மூத்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

நயந்தாரா பெரியவரா என்ற அதிர்ச்சியில் ரசிகர்கள் இருந்தாலும் காதலுக்கு வயது தடையில்லை என்று கூறி வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like