உலகிலேயே இந்த 5 ராசி பெண்கள்தான் சிறந்த அம்மாவாக இருப்பார்களாம்! யார் மிக சிறந்த தாய் தெரியுமா?

உங்கள் ராசிகளின் அடிப்படையில் நீங்கள் எதிர்காலத்தில் எப்படிப்பட்ட தாய் என்பதை ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

அந்த பலன்கள் இதோ உங்களுக்காக..

மேஷ ராசி
மேஷ ராசியினர், எப்போதும் தலைவாரக இருக்கும் தகுதி உள்ளவர்கள். குழந்தை பருவத்து குறும்புகளையும் விளையாட்டுகளையும் ரசித்து அதற்கான இடம் கொடுக்கும் அதே வேளையில், எல்லா பாடங்களையும் படிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் விதிப்பவராக இருக்கின்றனர் மேஷ ராசியினர். தன் குழந்தை எல்லாவற்றிலும் சிறந்த விளங்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

ரிஷப ராசி
ரிஷப ராசியினர் பொறுமைக்கு பேர் போனவர்கள். “சாது மிரண்டால் காடு கொள்ளாது” என்ற பழமொழி இவர்களுக்கு ஏற்றதாக இருக்கும். இவர்கள் கோபம் கொள்வது அரிது, என்றாலும் ஒரு முறை கோபம் கொண்டால், இவர்களை சமாதானம் செய்வது முடியாத காரியம் ஆகும். ரிஷப ராசி தாய்மார்கள், கோபமாக இருக்கும் போது கண்டிப்பான மற்றும் கடினமான முடிவுகளை எடுப்பார்கள்.

துலாம் ராசி
வாழ்க்கையில் நடுநிலையை கடைபிடிப்பது எப்படி என்பதை துலாம் ராசியினரிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். துலாம் ராசியினர் சமாதானப் பிரியர்கள். எப்போதும் அமைதியாக இருப்பவர்கள். தங்கள் குழந்தைகளை எந்த வகையிலும் தண்டிக்காதவர்கள்.

மகர ராசி
ஆயிரம் விதிகள் கொண்ட ஒரு தாயாக மகர ராசி தாய்மார்கள் இருப்பார்கள். மேஷ ராசி தாய்மார்களைப் போல் இவர்கள் பெரும்பாலும் நடந்து கொள்வார்கள். மகர ராசி தாய்மார்கள், தாய்மைக்கான செயல்பாடுகளில் அலுவலக பணியின் தீவிரத்தைக் காட்டுவார்கள். வெளியிலிருந்து பார்க்கும்போது கறாரான ஒரு அம்மாவாக தோன்றினாலும், குழந்தைக்கு எல்லா விதங்களிலும் உதவியாக இருப்பார்.

மீன ராசி
மீன ராசி தாய்மார்கள் உணர்ச்சி மிகுந்தவராகக் கருதப்படுவார்கள். மிக அதிக அளவு அன்பை தங்கள் குழந்தைகளிடம் செலுத்துவார்கள். குழந்தைகளின் உணர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இயற்கையை மிகவும் நேசிக்கும் மீன ராசி தாய்மார்கள், கலைகளில் அதிக ஈடுபாடு உள்ளவராக இருப்பார்கள். தங்கள் குழந்தைக்கும் இதே குணநலன் இருக்க வேண்டும் என்று அதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like