கொரோனா பாதிப்பால் இறந்த பிரபல குணசித்திர நடிகர்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகினர்கள்

கயல் படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகர் ஃப்ளோரன்ட். இவர், இவர் என்கிட்டா மோதாதே (2017), வேலையில்லா பட்டதாரி 2 (2017),ராஜா மந்திரி, தொடரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், திடீரென காய்ச்சல் வரவே கொரோனா பரிசோதனை செய்தபோது, அவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதனைத் தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு பெரேராவின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனளிக்காமல் நேற்றிரவு (செப்டம்பர் 14) உயிரிழந்தார். அவருக்கு வயது. இவரின் மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like