இன்றைய ராசிபலன் 23-03-2018

மேஷம்: சுயநலத்துடன் சிலர் உதவி செய்ய முன் வருவர். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். நிலுவைப் பணம் வசூலாகும். ஆரோக்கியம் பலம் பெறும். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.

ரிஷபம்:முக்கிய பணியை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். தொழில் வியாபாரம் சீர் பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வாகனப் பயணத்தில் மித வேகம் பின்பற்றவும்.

மிதுனம்:
பலரும் உங்கள் மீது நல்ல எண்ணம் கொள்வர். தொழில் வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். மனைவி விரும்பிய பொருட்களை வாங்கித் தருவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி வளரும்.

கடகம்: வாக்குறுதி நிறைவேற தாமதமாகலாம். பொறுமையுடன் செயல்படுவது நல்லது. தொழிலில் சுமாரான லாபம் கிடைக்கும். பெண்களுக்கு வீட்டுச் செலவு அதிகரிக்கும். உடல்நலனில் அக்கறை தேவை.

சிம்மம்:
நல்லவர்களின் நட்பால் உதவி கிடைக்கும். புதிய முயற்சியில் வெற்றி காண்பீர்கள். தொழில் வியாபாரம் செழிக்கும். உபரி வருமானம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

கன்னி: வாழ்வில் குறுக்கிடுகிற சிரமத்தை சரி செய்ய முயல்வீர்கள். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சியால் பணவரவு அதிகரிக்கும். பணக்கடனில் பெரும்பகுதியைச் செலுத்துவீர்கள்.

துலாம்:
நண்பர்களின் செயலால் அதிருப்தி உருவாகலாம். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். லாபம் சுமாராக இருக்கும். பிள்ளையைக் கண்டிப்பதில் நிதானம் தேவை. திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.

விருச்சிகம்:
சொந்தப்பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரத்தில் இலக்கை அடைய விடாமுயற்சி தேவைப்படும். வருமானம் சுமார். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர்.

தனுசு:
சிறிய முயற்சியிலும் பெரிய நன்மை காண்பீர்கள். விலகிச் சென்ற நண்பரும் அன்பு பாராட்டுவார். தொழில் வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்.

மகரம்: கடந்த கால உழைப்பின் பலனைப் பெற்று மகிழ்வீர்கள். தொழில் வியாபார வளர்ச்சியால் லாபம் உயரும். பெண்கள் புத்தாடை நகை வாங்க யோகம் உண்டு. பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும்.

கும்பம்:
வழக்கத்திற்கு மாறாக பணிச்சுமை அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மூலதனம் அதிகம் தேவைப்படும். லாபம் சுமாராக இருக்கும். நண்பரால் உதவி உண்டு .பெண்கள் வீட்டுச் செலவுக்காக கடன் வாங்க நேரிடலாம்.

மீனம்:
பிறருக்காக தகுதி மீறிய வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் வருமானம் சராசரி அளவில் இருக்கும். உறவினர் வருகையால் வீட்டுச் செலவு எகிறும். உடல்நலனுக்காக மருத்து சிகிச்சை தேவைப்படலாம்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like