திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
India

பழைய போனை விலைக்கு வாங்கிய நபருக்கு வந்த போன்கால்… பரிதாபமாக உயிரைவிட்ட கொடுமை

பகிர: Facebook WhatsApp X Telegram
பழைய போனை விலைக்கு வாங்கிய நபருக்கு வந்த போன்கால்… பரிதாபமாக உயிரைவிட்ட கொடுமை

பழைய போன் ஒன்றினை விலைக்கு வாங்கிய நபர் பொலிசாரின் விசாரணை அழைப்பு வந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்த லட்சுமணன்(24) என்பவர் அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

சிலதினங்களுக்கு முன்பு பழைய செல்போன் ஒன்றினை பணம் கொடுத்து வாங்கியுள்ளார். இந்தநிலையில் லட்சுமணன் தான் வாங்கிய பழைய செல்போனில், தனது சிம் கார்டை போட்டு பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்தநிலையில், லட்சுமணனுக்கு காவல் நிலையத்தில் இருந்து அழைப்பு வந்தநிலையில், குறித்த செல்போன் ஒருவரின் தொலைந்துபோன செல்போன் எனவும், விசாரணைக்கு காவல்நிலையத்திற்கு வருமாறும் கூறியுள்ளனர்.

இதனையடுத்து லட்சுமணன் காவல் நிலையத்திற்கு சென்ற போது, அங்கு செல்போன் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து லட்சுமணன் மூர்மார்க்கெட்டில் ஒரு கடையில் வாங்கினேன் என கூறியுள்ளார்.

இதனையடுத்து லட்சுமணனிடம் பொலிசார், நாங்கள் அழைக்கும்போது, எங்களுடன் வந்து செல்போன் விற்ற நபரை அடையாளம் காட்ட வேண்டும் என தெரிவித்தனர்.

இதையடுத்து அவர் வீட்டிற்கு மன உளைச்சலில் இருந்ததோடு, தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் புலம்பியுள்ளார்.

இந்நிலையில் மின்சார ரயில் ஒன்றின் முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொலிசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram