செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking
Cinema

குக் வித் கோமாளி புகழ் பதிவிட்ட ஒற்றைப் புகைப்படம்…. அன்று கார் துடைத்தவரின் இன்றைய வளர்ச்சி! புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram
குக் வித் கோமாளி புகழ் பதிவிட்ட ஒற்றைப் புகைப்படம்…. அன்று கார் துடைத்தவரின் இன்றைய வளர்ச்சி! புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ‘குக் வித் கோமாளி’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

முதல் சீசனின் டைட்டிலை பிக் பாஸ் வனிதா விஜயகுமார் வென்றார். அதில் ரன்னராக ரம்யா பாண்டியன் இடம் பிடித்தார். இதனையடுத்து தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இரண்டாவது சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கலந்துக் கொண்ட நிலையில், போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகிய 8 பேர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை கலகலப்பாக்குவதில் கோமாளிகளின் பங்கு அதிகம். அதனால் கோமாளிகளுக்கு என தனித்தனி ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றன.

இதில் புகழிற்கு ரசிகர்கள் மிக மிக அதிகம் என்றே கூறலாம். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த புகழ் தனது திறமையாலும், தன்னம்பிக்கையாலும் இன்று தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கியிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியிருக்கும் புகழ், அந்த மகிழ்ச்சியை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் ‘கார் கிளீனர் டூ கார் ஓனர்’ இதல்லவா வளர்ச்சி என புகழை பாராட்டி வருகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram