பாடகி சின்மயிடம் நிர்வாண புகைப்படம் கேட்ட சிறுவன்- அவர் கொடுத்த பதிலடி என்ன தெரியுமா?

பிரபல பாடகி சின்மயி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது.

அதன் பின் மீடு மூலம் குரல் கொடுத்துக்கொண்டு வருகிறார். இந்த நிலையில், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சின்மயிடம் இன்ஸ்டாகிராமில் சிறுவன் ஒருவன் எனக்கு பாலியல் உணர்வு உண்டாகி உள்ளது. உங்களது நிர்வாண புகைப்படத்தை அனுப்புங்க என கேட்டுள்ளார்.

அதற்கு பதிலடி கொடுத்த சின்மயி அந்த சிறுவன் மீது புகார் கூறியுள்ளார். மேலும் பாலியல் உணர்வு உண்டாகி இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை கேளு எனவும் தெரிவித்துள்ளார்.

பின்னர், நீங்கள் பெற்றோராக இருந்தால் உங்கள் குழந்தையை மிகுந்த கவனத்துடன் வளருங்கள். அவர்களிடம் மனம் திறந்து பேசுங்கள், உடலுறவு என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் குறித்தும் அவர்களுக்கு புரிய வையுங்கள் என அறிவுரை வழங்கியுள்ளார். இந்த சம்பவம் இன்ஸ்டாகிராமில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.