சனி, நவம்பர் 7, 2026
Breaking
Astrology

2022 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சி எப்போது? எந்த ராசிக்காரர்களுக்கு கஷ்டம் விலகும்?

பகிர: Facebook WhatsApp X Telegram
மகர ராசியை ஆட்டிப்படைக்க போகும் ஜென்மசனி… அள்ளி கொடுக்கும் குரு…! ஏழரை சனியால் யாருக்கு 2020 இல் ராஜயோகம் தெரியுமா?

2022 ஆம் ஆண்டில் ஏப்ரல் 29 ஆம் தேதி சனிப் பெயர்ச்சி நடக்கவிருக்கிறது.

இந்த சனி பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறார்கள்.

அதே வேளையில் மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் முதல் கட்டம் ஆரம்பமாகிறது.

மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் அஷ்டம மற்றும் அர்தாஷ்டம சனியில் இருந்து விடுபடுகிறார்கள்.

அதே சமயம், கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அஷ்டம் மற்றும் அர்தாஷ்டம சனி தொடங்குகிறது.

அந்தவகையில் 2022 சனி பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களின் பிரச்சனையும், வலியும் தீரப் போகிறது

மேஷம்
2022 சனிபெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறப் போகிறார்கள்.

இப்பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள். புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.

வேலையில்லாமல் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கப் போகிறது. அதோடு, பணிபுரிபவர்களுக்கு பணியிடத்தில் பதவி உயர்வும், மரியாதையும் கிடைக்கும்.

முடிவுக்கு வரும் ஏழரை சனி… குபேரனின் அருளால் 4 ராசிக்கு உண்டாகும் அதிர்ஷ்டம்!

ரிஷபம்
ஜோதிடத்தின் படி, ரிஷப ராசிக்காரர்கள் 2022 சனி பெயர்ச்சியால் விரும்பிய வேலையைப் பெறுவார்கள். தொழிலில் முன்னேற்றமும், வருமான உயர்வையும் பெறுவார்கள்.

இந்த சனி பெயர்ச்சி காலம் ஒட்டுமொத்தமாக நல்ல காலமாக இருக்கும். அதே வேளையில், இதுவரை உங்களின் வேலையில் இருந்த தடைகள் நீங்கி, நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும்.

குருபெயர்ச்சி பலன் 2022 – பணம் தேடி வந்து கதவை தட்டும்…கூடவே கெட்டிமேளச்சத்தமும் கேட்கும்

மிதுனம்
2022 சனி பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல பலனை அளிக்கப் போகிறது. வருமானத்தில் உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

நிலுவையில் உள்ள வேலைகள் சனி பெயர்ச்சிக்குப் பின் வெற்றிகரமாக முடிக்கப்படும். நீண்ட தூர பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் அமையும். நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த நோயில் இருந்து விடுபடுவீர்கள்.

குருப்பெயர்ச்சி பலன்கள்: கும்ப ராசிக்கு இனி எப்படி இருக்கப்போகிறது தெரியுமா?

கன்னி
2022 சனிப் பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்கள் பல வழிகளில் நன்மைகளைப் பெறப் போகிறார்கள்.

இக்காலத்தில் எந்த இன்டர்வியூ சென்றாலும் அல்லது தேர்வு எழுதினாலும், அதில் வெற்றி கிடைக்கும்.

புதிய வருமானத்திற்கான கதவுகள் திறக்கப்படும். பணிபுரிபவர்களுக்கு சம்பளம் உயரக்கூடும். சிக்கிய பணம் இக்காலத்தில் உங்கள் கைக்கு வந்து சேரும்.

2022 குருபெயர்ச்சி பலன்கள்: மேஷ ராசிக்கு கூரையை பிய்த்து கொட்டும் அதிர்ஷ்டம்

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram