ரிஷபத்தில் செவ்வாய் வக்ர பெயர்ச்சி; எந்த ராசிக்கெல்லாம் ஆபத்து!

செவ்வாய் பெயர்ச்சி 2022: நவம்பர் 13 ஆம் திகதி ரிஷப ராசியில் செவ்வாய் பிரவேசித்துள்ளார். செவ்வாயின் அசுப பலன் இந்த 5 ராசிக்காரர்களுக்கு இருக்கும்.

ரிஷப ராசியில் செவ்வாய் வக்ர நிலையில் இருப்பதால் அடுத்த 5 மாதங்களில் சில பெரிய இயற்கை சீற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஜோதிட ரீதியாக ஒருவருக்கு பலம், வலிமை, ஆற்றல் உள்ளிட்டவற்றை தரக்கூடியவர் செவ்வாய் பகவான். அக்டோபர் 30ம் திகதி மிதுனத்தில் வக்ர பெயர்ச்சியை தொடங்கிய செவ்வாய் பகவான், நவம்பர் 13ம் திகதி வக்ர நிலையில் ரிஷப ராசிக்கு வக்ர பெயர்ச்சி அடைந்துள்ளார்.

வரும் 13 ஜனவரி 2023ம் திகதி வரை செவ்வாய் பகவான் ரிஷபத்தில் வக்ர நிலையில் சஞ்சரித்து பின்னர் நேர்மறையான நகர்வை தொடங்குவார்.

2023 பிப்ரவரி 25ம் திகதி வரை ரிஷபத்திலேயே சஞ்சரிப்பார். இந்த காலத்தில் கீழ்வரும் 5 ராசியினர் அவதானமாக இருக்க வேண்டுமென சொல்லப்பட்டுளது. அந்தவகையில் ,​

5 ராசியினர்
மிதுனம்
மிதுன ராசிக்கு 12ம் வீடான விரய ஸ்தானத்தில் செவ்வாய் வக்ர நிலையில் இருப்பதால், உங்களின் நிதி நிலை பாதிக்கப்படும். குறிப்பாக ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் வேண்டும்.

சிறிய உடல்நலப் பிரச்னைகள் காரணமாக செலவுகள் உங்களை தடுமாறச் செய்யும். சரியான திட்டமிடலுடன் செலவு செய்யவும். குடும்பத்தில் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, நிதானமாக செயல்பட உங்கள் உறவு சிறக்கும். பேச்சில் கவனம் தேவை. பயணங்களின் போதும், மதிப்புமிக்க பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை.

கன்னி
ராசி கன்னி ராசிக்கு 9ம் வீடான லாப ஸ்தானத்தில் செவ்வாய் பகவானின் வக்ர நிலை சஞ்சாரத்தால் உங்களின் தந்தையுடனான உறவில் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மாணவர்கள் கல்வியில் தடுமாற்றங்களும், சவால்களைச் சந்திக்க நேரிடும்.

படிப்பில் கூடுதல் கவனம் தேவை. மாணவர்களும், பணியாளர்களும் உங்கள் பணிகளை சரியான நேரத்தில் முடிக்க சரியான திட்டமிடல் அவசியம். சோம்பேறித்தனத்தை ஒதுக்கவும். ஆன்மிகத்தில் ஆர்வம் குறையும். அதிர்ஷ்டத்தை தவிர்த்து முயற்சியை நம்பவும்.

துலாம்
துலாம் ராசிக்கு 8ம் வீடான ஆயுள், துஸ் ஸ்தானத்தில் செவ்வாய் வக்ர நிலையில் சஞ்சரிக்க உள்ளதால், எதிலும் கவனம் தேவை. குறிப்பாக பணியிடத்தில் பணிச்சுமையும். நிலைமை உங்களுக்கு எதிரானதாக இருக்கும்.

பணிச்சுமையால் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். வாகனங்களைக் கையாளும் போது மிக கவனம் தேவை. இந்த காலகட்டத்தில் அடிவயிற்றின் கீழ் பகுதி தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் இருக்கலாம், எனவே உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். சிலருக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும்.​

தனுசு
தனுசு ராசிக்கு 6ம் வீடான நோய், எதிரி ஸ்தானத்தில் செவ்வாயின் சஞ்சாரம் உங்கள் வாழ்க்கையில் சில ஏற்றத் தாழ்வுகளைத் தரக்கூடியதாக இருக்கும். உணர்ச்சிவசப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். இதனால் இழப்பு தான் ஏற்படும். உங்களின் எந்த ஒரு வேலையிலும் கவனமாக செயல்படுவது அவசியம்.

இந்த நேரத்தில் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருப்பதோடு, சரியான உணவை எடுத்துக் கொள்ளவும். இந்த நேரத்தில் உங்கள் எதிரிகள் உங்கள் வேலையை கெடுக்க முயற்சி செய்யலாம், எனவே நீங்கள் எல்லாவற்றையும் மிகவும் கவனமாக கையாளவும்.​

கும்பம்
கும்ப ராசிக்கு 4ம் வீட்டில் செவ்வாய் வக்ர நிலையில் சஞ்சரிக்க உள்ளார். இதனால் உங்களின் காதல் வாழ்க்கையில் சில பிரச்னைகள் வரலாம். அதனால் உங்களின் கருத்துக்களை உங்கள் துணையிடம் திணிப்பதைத் தவிர்க்கவும்.

பேச்சிலும், செயலிலும் நிதானமும், கவனமும் தேவை. கல்வித்துறையில் பணிபுரிபவர்களின் செயல்பாடுகள் குறித்து கேள்விகள் எழலாம், உங்கள் பணிகளை முழு கவனத்துடன் முடிப்பது நல்லது. உங்களின் நிதி நிலை பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.