அமெரிக்காவை உலுக்கும் பேரழிவு: துல்லிய கணிப்பை வெளியிட்ட பிரித்தானிய ஜோதிடர்

2024 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பேரழிவு ஏற்பட்டு பாரிய மாற்றங்கள் ஏற்படும் என பிரித்தானியாவை சேர்ந்த பிரபல ஜோதிடர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

பிரித்தானியாவின் நாஸ்ட்ராடாமஸ் என அறியப்படும் Craig Hamilton-Parker என்பவரே, உலகின் அறியப்படும் நகரம் ஒன்றில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்படும் ஆபத்து இருப்பதாக எச்சரித்துள்ளார்.

தமது சமூக ஊடக பக்கத்தில் இது தொடர்பில் அவர் விரிவான விளக்கமும் அளித்துள்ளார்.

அதிகாரத்தை இழக்கும் அமெரிக்கா
அமெரிக்கா தொடர்பில் குறிப்பிட்ட அவர், அந்த நாடு தனது அதிகாரத்தை மெல்ல இழக்கும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், அமெரிக்காவில் மின்சாரம் பாதிக்கப்பட்டு, மொத்தமாக சில பகுதிகளில் மின் தடை ஏற்படுவதற்காக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும் கலிபோர்னியா மற்றும் டெக்சாஸ் மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்றார்.

உள்கட்டமைப்புகள் பாதிக்கப்படும் சூழல் அமெரிக்காவில் ஏற்பட இருப்பதாகவும், அது இயற்கை பேரிடராக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2024ல் மிகப்பெரிய நிலநடுக்கம் ஒன்று அமெரிக்காவை உலுக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.