கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. சனிபகவான் கருணை காட்டுவாரா? தப்பிக்கப் போகும் ராசியினர் இவர்கள் தானாம்.

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக கொண்டு கணிக்கப்படுகின்றன.

இதன்படி, சனிபகவானின் பிடியில் நாம் சிக்கியிருக்கிறோம் என்பதை சில அறிகுறிகளை வைத்து அறிந்து கொள்ளலாம்.

கடன் தொந்தரவு, எடுத்த காரியம் தடையாகும், அடி மேல் அடி விழும், இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகள் வீடு தேடி வரும்.

சனியின் பெயர்ச்சி இந்த ஆண்டு தொடக்கத்தின் போது நடந்தது. இந்த பெயர்ச்சியின் போது மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு சனி பெயர்ச்சி ஆகினார். இந்த பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் ஏழரை சனி நடக்கிறது.

அடுத்த பெயர்ச்சியின் போது யாருக்கு ஏழரை சனி நடக்க உள்ளது. யார் அதிலிருந்து விடுபடுவார் என்பதை தெரிந்து கொள்வோம்.

2023ல் ஜனவரி 17ம் தேதி நடந்த சனி பெயர்ச்சியின் போது மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு சனி மாறினார். இவர் 2025ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி வரை கும்ப ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.

12 ராசிக்கான சனியின் அமைப்பு

  • மேஷம் – லாப சனி
  • ரிஷபம் – கர்ம சனி
  • மிதுனம் – பாக்கிய சனி
  • கடகம் – அஷ்டம சனி
  • சிம்மம் – கண்ட சனி
  • கன்னி – ரோக சனி
  • துலாம் – பஞ்சம சனி
  • விருச்சிகம் – அர்த்தாஷ்டமச் சனி
  • தனுசு – சகாய சனி
  • மகரம் – பாத சனி
  • கும்பம் – ஜென்ம சனி
  • மீனம் – விரய சனி

இதில் மகரம், கும்பம், மீன ராசிகளுக்கு ஏழரை சனி நடக்கிறது.

2025ம் ஆண்டில் நடக்கும் சனி பெயர்ச்சியின் போது சனி மீன ராசிக்கு மாற உள்ளார்.

சனியின் மாற்றமும், ஏழரை சனி விடிவும் :

சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிக்கக்கூடியவர். அதனால் 12 ராசிகளை சுற்றி முடிக்க 30 ஆண்டு காலம் எடுத்துக் கொள்வார்.

2023 தொடக்கத்தில் நடந்த சனி பெயர்ச்சியால் கும்ப ராசிக்கு சனி மாறியுள்ள நிலையில், தனுசு ராசியினருக்கு ஏழரை சனி முடிந்து விடிவுகாலம் பிறந்துள்ளது.

அதே சமயம் மீன ராசிக்கு புதிதாக ஏழரை சனி தொடங்கியுள்ளது. ஏழரை சனி நடக்கும் மகரம், கும்பம், மீன ராசிக்கான சுருக்கமான பலன் பார்ப்போம்.

மகரம்
மகர ராசியினருக்கு ஏழரை சனி நடக்கக்கூடிய நிலையில் தற்போது நன்மை மற்றும் தீமை இரண்டும் கலந்த பலன் கிடைக்கும். .புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். இருப்பினும் உங்களின் நிதி ஆதாயம் குறைவாகவே இருக்கும். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். சிலருக்கு சொத்து தகராறுகள் ஏற்படலாம். அதனால் நிதி விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

கும்பம் ராசி
கும்பம் ராசியிலேயே சனி சஞ்சாரம் செய்யக்கூடிய ஜென்ம சனி நடக்க உள்ள நிலையில் உங்களின் வேலையில் ஆதாயம் அடைவார்கள். நீங்கள் முயன்று தடைப்பட்டிருந்த வேலைகள் முடிவடைந்து அதற்கான பலன்களால் எதிர்காலத்தில் பலனடைவீர்கள் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள்.

மீன ராசி
மீன ராசிக்காரர்கள் எந்த ஒரு வேலையிலும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்களின் உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். புதிய முதலீடுகள் செய்தல், பண பரிவர்த்தனை விஷயங்களில் கவனமாக இருக்கவும். சிலருக்கு நிதி நிலையில் நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.