இன்றைய ராசிபலன் 20-06-2018

மேஷம்: அதிர்ஷ்டகரமான நாள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உற்சாகமாகச் செயல்படுவீர்கள். சகோதரர்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. ஆனால், புதிய முயற்சிகளை மட்டும் தவிர்த்துவிடுவது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
ரிஷபம்: இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். என்றாலும் சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.
மிதுனம்: மனதில் இனம் தெரியாத சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனால், உடல் நலனில் கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அலட்டிக்கொள்ளாமல் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படக்கூடும்.
கடகம்: உற்சாகமான நாள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும். தந்தை வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கூடுதலாகக் கிடைப்பது மகிழ்ச்சி தரும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.
சிம்மம்: மனதில் துணிச்சல் அதிகரிக்கும். திடீர் செலவுகள் ஏற்படக்கூடுமென்றாலும் தேவையான பணம் கையில் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும் பெரிதாக பாதிப்பு இருக்காது. மற்றவர்களுடன் பேசும்போது நிதானம் தேவை. அலுவலகத்தில் உங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். பணியாளர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நவீன ரக ஆடைகளை வாங்கி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.
கன்னி: தெய்வ அனுகூலம் நிறைந்த நாளாக இருக்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் சம்பவம் ஒன்று நிகழ வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். அடுக்கடுக்கான பணிகளையும் அழகாகச் செய்து பாராட்டு பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.
துலாம்: உற்சாகமான நாளாக இருக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதால் கையிருப்பு கரைவதுடன் கடனும் வாங்கவேண்டி வரும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வாழ்க்கைத்துணைக்காக செலவு செய்யவேண்டி வரும். ஆனாலும், அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சலுகைகள் கிடைப்பதில் தடை தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும்.
விருச்சிகம்: இன்று புதிய முயற்சி எதுவும் வேண்டாம். வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். சிலருக்குக் குடும்ப விஷயமாகப் பயணம் மேற்கொள்ள நேரிடும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைப்பது உற்சாகம் தரும். உறவினர்கள் வருகையால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் செலவுகள் ஏற்படக்கூடும்.
தனுசு: மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். துணிச்சலாகச் செயல்படுவீர்கள். சகோதர வகையில் சில சங்கடங்களைச் சந்திக்க நேரிடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனால், வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆதரவும் எதிர்பார்த்த சலுகையும் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
மகரம்: இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.
கும்பம்: தேவையான பணம் கையில் இருப்பதால் திடீர் செலவுகளை சமாளித்துவிடுவீர்கள். மனதில் சிறு சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் வருகை குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பை ஏற்படுத்தக்கூடும். ஆனால், வாழ்க்கைத்துணை அனுசரணையாக நடந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். அலுவலகத்தில் காலையில் உற்சாகமான சூழ்நிலை காணப்பட்டாலும், பிற்பகலுக்கு மேல் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.
மீனம்: உற்சாகமான நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அரசாங்கக் காரியங்கள் முடிவதில் இருந்து வந்த தடைகள் விலகும். வாழ்க்கைத்துணைவழி உறவினர் ஒருவரிடமிருந்து சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாக இருந்தாலும் பணியாளர்களால் செலவுகளும் ஏற்படக்கூடும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.