ஞாயிறு, நவம்பர் 8, 2026
Breaking
இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் 02-07-2018

பகிர: Facebook WhatsApp X Telegram
இன்றைய ராசிபலன் 20-05-2018
மேஷம்: தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் சிறிது தாமதம் ஏற்பட்டாலும் கிடைத்துவிடும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிற்பகலுக்கு மேல் சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் விற்பனை எப்போதும்போல் இருக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
ரிஷபம்: உடல் நலனில் கவனம் செலுத்தவேண்டிய நாள். சகோதரர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வது நல்லது. சிலருக்கு திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக் கூடும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வீண் செலவுகள் அதிகரிக்கும். திடீர் பயணத்தால் உடல் அசதி உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களிடம் எந்த உதவியும் கிடைப்பதற்கில்லை. வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகக் கூடும்.
மிதுனம்: இன்று குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும், பாதிப்பு இருக்காது. உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். தாய்வழியில் திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். சிலருக்கு நீண்டநாளாக முடியாமல் இருந்த தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாக எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.
கடகம்: எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். தாய்மாமன் வகையில் நீண்டநாளாக எதிர்பார்த்த உதவி இன்று கிடைக்கக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வது ஆறுதல் தரும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
சிம்மம்: புதிய முயற்சி சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாலையில் வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். அலுவலகத்தில் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
கன்னி: உற்சாகமான நாள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு உறவினர் அல்லது நண்பர்கள் மூலம் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். சக பணியாளர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும்.
துலாம்: மனதில் வீண் குழப்பங்கள் தோன்றி மறையும். ஆனால், புதிய முயற்சி சாதகமாக முடியும். குல தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பயணத்தின்போது கைப்பொருளை பத்திரமாகப் பார்த்துக்கொள்வது நல்லது. உடல் நலனில் கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் மனதில் சோர்வு உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். சக வியாபாரிகளால் பிரச்னை ஏற்படும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.
விருச்சிகம்: மனதில் உற்சாகம் ஊற்றெடுக்கும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். துணிச்சலாக முடிவெடுப்பீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத் துணை ஆதரவாக இருப்பார். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனை பாராட்டப்படும். சலுகைகளும் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.
தனுசு: புதிய முயற்சியில் ஈடுபடுவதை தவிர்க்கவும். காரியங்கள் இழுபறியாக முடியும். தேவையான பணம் இருந்தாலும், எதிர்பாராத செலவுகளால் மனச் சஞ்சலம் உண்டாகும். சகோதர வகையில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனைக்கேற்ற லாபம் கிடைப்பதற்கில்லை. பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டு.
மகரம்: உற்சாகமான நாள். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கி, அந்நியோன்யம் ஏற்படும். முக்கிய முடிவில் வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று வருவீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். அலுவலகத்தில் தடைப்பட்டு வந்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.
கும்பம்: தேவையான பணம் கையில் இருந்தாலும், எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரைவதுடன், சிலர் கடன் வாங்கவும் நேரிடும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு மகான்களின் அதிஷ்டானங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீட்டில் தொலைந்த பொருள் கிடைக்கக்கூடும்.
மீனம்: எதிர்பாராத பணவரவுக்கும் பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு வாக்குவாதம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கூடுதலாகக் கிடைக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்