ஞாயிறு, நவம்பர் 8, 2026
Breaking
இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் 11-07-2018

பகிர: Facebook WhatsApp X Telegram
இன்றைய ராசிபலன் 20-05-2018
மேஷம்: அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் தேவையை நிறைவேற்றுவதற்காக செலவு செய்யவேண்டி வரும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன், அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவேண்டி இருக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு விலகும்.
ரிஷபம்: தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. குடும்ப விஷயமாக சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரும். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளை மட்டும் தவிர்க்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியுடன் ஆதாயமும் தருவதாக இருக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
மிதுனம்: புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு வீண் அலைச்சல் ஏற்படவும் அதனால் உடல் அசதி உண்டாகவும் கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் சோர்வாக இருப்பீர்கள். மாலையில் சோர்வு நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.
கடகம்: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். சலுகைகள் கிடைக்கும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க கூடுதலாக உழைக்கவேண்டி வரும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைக் காலையிலேயே தொடங்குவது சாதகமாக முடியும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டாகும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
சிம்மம்: தாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்புத் தருவார். அவர்மூலம் உங்களுக்குத் தேவையான உதவிகளும் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனையை அதிகாரிகள் ஏற்றுக்கொள்வார்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.
கன்னி: சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மாலையில் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். புதிய டிசைனில் ஆடைகள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். பிற்பகலுக்கு மேல் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். லாபம் எதிர்பார்த்தபடியே இருக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.
துலாம்: திடீர் செலவுகள் ஏற்படும். தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் பணியாளர்களால் சிறுசிறு சங்கடங்களும் ஏற்படக்கூடும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
விருச்சிகம்: மனதில் இனம் தெரியாத சோர்வு ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். நண்பர்கள் உங்கள் தேவையை அறிந்து உதவி செய்வார்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களின் உதவி கிடைப்பதால் உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.
தனுசு: காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். தந்தை வழியில் ஆதாயம் கிடைப்பதுடன் செலவுகளும் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் புதிய பொறுப்புக்காக உங்கள் பெயர் பரிசீலிக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் பாக்கித் தொகை வசூலாகும். சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் ஏற்படக்கூடும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சல் காரணமாக உடல் அசதி ஏற்படக்கூடும்.
மகரம்: சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். ஆனால், புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். பயணத்தின்போது கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் பணிகளை உற்சாகமாகச் செய்து அதிகாரி களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாள். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.
கும்பம்: புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு குடும்பம் தொடர்பான பணிகளுக்காக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். சிலருக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் பணிச் சுமை இருந்தாலும் சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பது உற்சாகம் தரும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயின் தேவையை நிறைவேற்றி ஆசி பெறும் வாய்ப்பு ஏற்படும்.
மீனம்: மகிழ்ச்சியான நாள். மன உறுதியுடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத பணலாபம் உண்டாகும். கடன்களில் ஒரு பகுதியைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பிற்பகலுக்கு மேல் உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்