பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன்! கடும் ஷாக்கான ரசிகர்கள்

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி போலவே தெலுங்கு, கன்னடம் மலையாளம் என்று பல்வேறு தென்னிந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தெலுங்கில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியும் மிகவும் சுவாரஷ்யமாக சென்று கொண்டிருக்கின்றது.

தற்போது மூன்றாவது சீசனை நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார்.

முதல் இரண்டு சீசன்களையும் விட நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வரும் மூன்றாவது சீசன் மிகவும் சுவாரஸ்யமாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில் நிகழ்ச்சியை மேலும் பரபரப்பாக்க பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணனை ஒரு நாள் தொகுப்பாளினியாக அழைத்து சென்றுள்ளனர்.

பிக் பாஸ் மேடையில் இவரது திடீர் வருகையால் ரசிகர்கள் மிகவும் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் தொகுப்பாளரை மாற்றி விட்டதாக ஒரு கருத்து வைரலானது. எனினும், அது உண்மையில்லை ஒரு நாள் மாத்திரமே தொகுப்பாளராக நடிகை ரம்யா கிருஷ்ணன் அழைத்து வரப்பட்டுள்ளார்.

இதேவேளை, தமிழில் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாகவே சுவாரசியம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.

இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்பதால் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை கூட சுவாரஸ்யம் இல்லை. இதே போல தமிழிலும் சில எதிர்பாராத மாற்றங்களை கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். பொருத்திருந்து பார்ப்போம் தமிழிலும் அதிரடி திருப்பங்கள் நிகழுமா என்று.