சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking
Biggboss

நிறைவடையும் இறுதிநாள் ஓட்டிங்…. அப்போ வெற்றியாளர் இவர் தானா…?

பகிர: Facebook WhatsApp X Telegram
நிறைவடையும் இறுதிநாள் ஓட்டிங்…. அப்போ வெற்றியாளர் இவர் தானா…?

பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைய இருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார்? என்ற எதிர்பார்ப்பு தான் மக்கள் மனதில் அதிகளவில் கேள்வியாக இருக்கிறது.

கடந்த வாரம் நாமினேஷன் மூலம், தர்ஷன் வெளியேறியதால் தற்போது ஷெரின், சாண்டி, முகென், லாஸ்யா ஆகியோர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். அதேபோல இந்த சீசனில் தான் இறுதிப்போட்டிக்கு இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் தகுதியாகி உள்ளார்கள்.

இந்நிலையில் பிக் பாஸ் பட்டத்திற்காக நடைபெற்று வரும் ஓட்டிங்கில் முகென் தான் முதல் இடத்தில் இருந்து வருவதாக நம்பகரமான வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதே போல தற்போது பல்வேறு இணையதளங்களில் நடத்தப்பட்டு வரும் ஓட்டிங்கில் முகெனுக்கு தான் அதிக வாக்குகள் விழுந்து வருகிறது. அவரை தொடர்ந்து லாஸ்லியாவும் மூன்றாவது இடத்தில் சாண்டியும், இறுதி இடத்தில் ஷெரினும் இருந்து வருகிறார்கள். எனவே, முதல் நாளிலிருந்து இன்று வரை முகென் முன்னணியில் இருந்து வருகிறார்

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்