ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking
Astrology

இன்றைய ராசிபலன் 26-02-2018

பகிர: Facebook WhatsApp X Telegram

மேஷம்: மனதில் தைரியமும் உற்சாகமும் பெருக்கெடுக்கும். துணிச்சலாகச் செயல்படுவீர்கள். புதிய முயற்சி சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்குத் தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் புதிய பொறுப்பு ஒன்று உங்களிடம் ஒப்படைக்கப்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுவதுடன் லாபமும் அதிகரிக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

விளம்பரம்

ரிஷபம்: இன்றைக்கு புதிய முயற்சி எதுவும் மேற்கொள்ளவேண்டாம். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம், வீண் அலைச்சலையும் செலவுகளையும் கொடுத்தாலும், சாதகமாக முடிந்துவிடும். மனதில் அடிக்கடி குழப்பம் ஏற்படக்கூடும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு சகோதரர்களால் தர்ம சங்கடமான நிலைமை ஏற்படக் கூடும். அலுவலகத்தில் மற்றவர்களின் விஷயத்தில் தலையிடாமல், உங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.

மிதுனம்: உற்சாகமான நாள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தந்தை வழி உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு வெளியூரில் உள்ள கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழும் சந்தர்ப்பம் ஏற்படும். வெளியூர்களுக்குப் பயணம் மேற்கொள்ள நேர்ந்தால், கைப் பொருள்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

விளம்பரம்

கடகம்: எதிர்பார்த்த பணம் வந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். கூடியவரை இன்று புதிய முயற்சி எதையும் மேற்கொள்ளவேண்டாம். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு மகான்களுடைய அதிஷ்டானங்களை தரிசிக்கும் அரிய வாய்ப்பு அமையக்கூடும். வாகனத்தில் செல்லும்போது மிகவும் கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்கள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் செலவுகள் அதிகரிப்பதால் மனதில் சலனம் ஏற்படக்கூடும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

சிம்மம்: உங்கள் மனதில் உற்சாகமும், செயல்களில் பரபரப்பும் காணப்படும். கணவன் – மனைவிக்கிடையில் பரபஸ்பரம் அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் யோசனையை வாழ்க்கைத்துணை ஏற்றுக்கொள்வார். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும், ஆடை, ஆபரண சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. நீண்டநாளாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படக் கூடும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

கன்னி: புதிய முயற்சி சாதகமாக முடியும். காரிய அனுகூலம் உண்டாகும். உங்கள் முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசாங்க அதிகாரிகளின் அறிமுகமும், அவர்களால் ஆதாயமும் ஏற்படக்கூடும். சிலருக்கு வீண் அலைச்சலும், செலவுகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். அலுவலகத்தில் அதிகப்படியான வேலைகளைச் செய்யவேண்டி வரும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் ஆதாயம் கிடைக்கும்.

துலாம்: மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். மனஉறுதியுடன் முடிவெடுத்து செயல்படுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக் கூடும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும் என்றாலும், மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பதால், மருத்துவச் செலவு ஏற்படும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறும் சந்தர்ப்பம் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.

விளம்பரம்

விருச்சிகம்: இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். புதிய முயற்சியைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், வார்த்தைகளில் நிதானம் தேவை. வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படுவது அவசியம். அலுவலகப் பணிகளில் தவறுகள் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதால், பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொலைதூரப் பயணங்களைக் கண்டிப்பாகத் தவிர்த்து விடவும்.

தனுசு: மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையில் பரஸ்பரம் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாகனப் பழுது சரியாகும். குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். சுப நிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

மகரம்: உடல் ஆரோக்கியம் மேம்படும். வழக்குகளில் சாதகமான போக்கு ஏற்படும். எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். முக்கியப் பிரமுகர்களின் தொடர்பும், அதனால் அனுகூலமும் உண்டாகும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக் கூடும். அலுவலகத்தில் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சக பணியாளர்கள் இணக்கமாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லை விலகும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

கும்பம்: சகோதரர்களின் ஆதரவு உற்சாகம் தரும். தந்தைவழியில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். புதிய முயற்சி அனுகூலமாக முடியும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்ப தால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு திடீர்ப் பயணம் ஒன்றை மேற்கொள்ள நேரிடும். வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை. அலுவலகப் பணிகளில் அதிகாரிகளின் ஆலோசனை தேவைப்படும் வியாபா ரத்தில் பணியாளர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சலும் செலவுகளும் ஏற்படக்கூடும்.

விளம்பரம்

மீனம்: தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் காரியங்களில் வெற்றியும் உண்டாகும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சி எதிலும் ஈடுபடவேண்டாம். வாகனத்தில் செல்லும்போது கவனமாகச் செல்லவும். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் கூடுதல் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டி இருக்கும் என்பதால் உடல் அசதி ஏற்படக்கூடும். வியாபாரத்தில் சக வியாபாரிகளின் போட்டிகளைச் சமாளிக்கவேண்டி வரும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாள்களாக எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram
விளம்பரம்

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்