இன்றைய ராசிபலன் 25-02-2018

மேஷம்: கணவன் மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு அவசரமான அலுவலகப் பணிகளை வீட்டில் இருந்தபடி முடிக்கவேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிக்கு ஆதரவாக இருப்பார்கள். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

ரிஷபம்: எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். தேவையான பணம் கையில் இருந்தாலும் வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். சிலருக்கு குடும்பம் தொடர்பாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். உங்கள் முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஒத்துழைப்புத் தருவார்கள். உறவினர்கள் வருகையால் சிறுசிறு சங்கடம் ஏற்படக்கூடும். வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும். சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது எச்சரிக்கையாக இருக்கவும்.

மிதுனம்: எதிர்பாராத தனலாபம் உண்டாகும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். முக்கியமான முடிவுகள் எதுவும் எடுக்கவேண்டாம். கூடுமானவரை வீண் அலைச்சலைத் தவிர்த்துவிடுவது நல்லது. வீட்டில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடி லாபம் கிடைப்பதுடன், பணியாளர்களால் செலவுகளும் ஏற்படக்கூடும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கினால் சாதகமாக முடியும்..

கடகம்: வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும். சிலருக்கு எதிர்பாராத பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. முயற்சியில் தடை ஏற்படும். சிலருக்குக் குடும்பத்துடன் அருகில் உள்ள கோயில்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். சகோதர வகையில் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். பணியாளர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.

சிம்மம்: எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்களுடைய யோசனையை வாழ்க்கைத்துணை ஏற்றுக்கொள்வார். வாழ்க்கைத் துணைவழி உறவுகளிடம் நீங்கள் எதிர்பார்த்த காரியம் முடியும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்க்காத அளவுக்கு விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

கன்னி: எதிர்பாராத பணவரவு உண்டாகும். திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தில் உறவினர்கள் வருகை சில பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு மாலையில் லேசான அளவில் தலைவலி வரக்கூடும் என்பதால், ஓய்வு எடுத்துக்கொள்வது அவசியம். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு ஒன்றை எடுப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்கள் வகையில் ஆதாயம் ஏற்படக்கூடும்.

துலாம்: புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு வெளியூர்க் கோயில்களை தரிசிக்கவும் வாய்ப்பு ஏற்படக்கூடும். இன்று எதிலும் நீங்கள் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும். உறவினர்களால் மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால், அவர்களிடம் பேசும்போது பொறுமையை கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். விற்பனை வழக்கம்போலவே இருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் மகிழ்ச்சி தரும் சம்பவம் ஒன்று நிகழக் கூடும்.

விருச்சிகம்
: புதிய முயற்சியைத் தவிர்க்கவும். மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படும்.நீண்ட நாள்களாகப் பார்க்காமல் இருந்த தாயைப் பார்க்கவும், அவருடைய தேவையை நிறைவேற்றவும் வாய்ப்பு கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். சிலருக்கு தாய்மாமன் வகையில் ஆதாயம் கிடைக்கக்கூடும். மாலையில் நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதுடன், கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

தனுசு: அனைத்துக் காரியங்களும் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் கிடைத்துவிடும். புதிய முயற்சிகளைத் தொடங்குவதற்குச் சிறந்த நாள். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

மகரம்: தந்தையின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வீர்கள். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். சகோதரர்களுக்கு உதவி செய்வீர்கள். சிலருக்கு புதிய ஆடைகளை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். சிலருக்குஅலுவலகப் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படக்கூடும்.

கும்பம்: மனம் உற்சாகத்துடன் காணப்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்குக் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் சந்தர்ப்பம் கூடி வரும். தாயின் விருப்பத்தை நிறைவேற்ற செலவு செய்வீர்கள். உணவு விஷயத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். சக வியாபாரிகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும்.

மீனம்: திடீர் செலவுகள் ஏற்படக்கூடும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள்.. தாய்வழி உறவுகள் உதவி கேட்டு வருவார்கள். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவி செய்வார்கள். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் பங்குதாரர்களால் சங்கடம் ஏற்பட்டு நீங்கும். மற்றபடி விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.