திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
India

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி மருத்துவனையில் திடீர் மரணம்.. இறப்பிற்கு காரணம் இதுவா?

பகிர: Facebook WhatsApp X Telegram
பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி மருத்துவனையில் திடீர் மரணம்.. இறப்பிற்கு காரணம் இதுவா?

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி(வயது 45) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கபோவது யாரு சீசனின் மூலம் அறிமுகமான வடிவேல் பாலாஜி ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்தவர்.

திரைப்படங்களிலும் காமெடி நடிகராக நடித்து வந்த வடிவேல் பாலாஜி 15 நாட்களுக்கு முன்னர் திடீர் மாரடைப்பு காரணமாக இரு கைகளும் வாதம் ஏற்பட்டு முடங்கி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

தொடர் சிகிச்சைக்குப் பின்னர் போதிய வசதி இல்லாத காரணத்தால் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட வடிவேல் பாலாஜி உயிர் பிரிந்தது.

மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவரின் இறப்புக்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

YouTube video

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்