இன்றைய ராசிபலன் 20-03-2018

மேஷம்: உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் பணி நெருக்கடி குறையும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி இருக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்: வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். மனதில் தேவையில்லாத குழப்பம் இருக்கும். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும், சமாளித்து விடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்கு சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பு தருவார்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

மிதுனம்: அதிர்ஷ்டகரமான நாள். இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகளால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கடகம்: தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும். உறவினர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் பேசும்போது கவனம் தேவை. அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் பணியாளர்களால் சிறு சிறு பிரச்னைகளைச் சந்திக்கவேண்டி இருக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும்.

சிம்மம்: மனதில் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும். குடும்பத்தில் மற்றவர்களை அனுசரித்துச் செல்லவும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களை அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடுவது நல்லது.

கன்னி: இன்று புதிய முயற்சியில் இறங்கவேண்டாம். சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சக பணியாளர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

துலாம்: மகிழ்ச்சி தரும் நாளாக அமையும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படக்கூடும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படக்கூடும்.

விருச்சிகம்: மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை மந்தமாக இருக்கும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.

தனுசு: அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் முடிவதில் தாமதம் உண்டாகும். தேவையற்ற செலவுகளால் மனதில் சஞ்சலம் உண்டாகும். பிள்ளைகளால் தொல்லைகள் ஏற்படக்கூடும் என்பதால் அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் சில பிரச்னைகளைச் சமாளிக்க வேண்டி வரும். வியாபாரத்தில் பங்குதாரர்களை அனுசரித்து செல்வது நல்லது. பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

மகரம்: புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர் வருகையால் வீட்டில் நிம்மதி உண்டாகும். பிள்ளைகள் அனுசரணையாக நடந்துகொள்வர். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் உற்சாகமான நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

கும்பம்: அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு ஆடை, ஆபரணம் வாங்கும் யோகம் உண்டாகும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் மகிழ்ச்சியான நிலையே நீடிக்கும். வியாபாரத்தில் விற்பனை நன்றாக இருக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் மூலம் ஆதாயம் ஏற்படும்.

மீனம்: குடும்பத்தில் தேவையில்லாத செலவுகள் அதிகரிக்கும். உடல் அசதியின் காரணமாக பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சுணக்கம் ஏற்படும். எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். வியாபாரம் எதிர்பார்த்த அளவு இருக்காது. பணியாளர்கள் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க அதிகாரிகளால் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like