திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Astrology

இன்றைய ராசிபலன்

பகிர: Facebook WhatsApp X Telegram
இன்றைய ராசிபலன் 26-05-2018

மேஷம்

மேஷம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். புது வேலை அமையும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அமோகமான நாள்.

ரிஷபம்

ரிஷபம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

மிதுனம்

மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். தோற்றப்பொலிவு கூடும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமுண்டு. நல்லன நடக்கும் நாள்.

கடகம்

கடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

சிம்மம்

சிம்மம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்கவேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேசாதீர்கள். வழக்கில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

கன்னி

கன்னி: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். வெற்றி பெறும் நாள்.

துலாம்

துலாம்: கோபத்தை கட்டுப்படுத்துவதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். தள்ளிப்போன விஷயங்கள் உடனேமுடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

தனுசு

தனுசு: சந்திராஷ்டமம் இருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வாக்குறுதியை நிறைவேற்ற போராட வேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாக பழகுங்கள். இடம், பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

மகரம்

மகரம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். நல்லன நடக்கும் நாள்.

கும்பம்

கும்பம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். தொட்டது துலங்கும் நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

 

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram