திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன்

பகிர: Facebook WhatsApp X Telegram
இன்றைய ராசிபலன் 26-05-2018

மேஷம்

மேஷம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். தோற்றப் பொலிவு கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிட்டும். வியாபாரத்தில் புதுமுதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

 

கடகம்

கடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனதில் இனம் புரியாத பயம் வந்து போகும். சிலரின் தவறுகளைசுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

 

சிம்மம்

சிம்மம்: எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கன்னி

கன்னி: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். கடமையுணர்வுடன் செயல்படும் நாள்.

துலாம்

துலாம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை தற்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். மகிழ்ச்சியான நாள்.

 

விருச்சிகம்

விருச்சிகம்: இதுவரை இருந்த மனக் கவலைகளும், சோர்வும் நீங்கி உற்சாகமடைவீர்கள். புதியவரின் நட்பால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை உயரும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்தியோகத்தில் மேல் அதிகாரியின் உதவி கிடைக்கும். மாற்றங்கள் நிறைந்த நாள்.

தனுசு

தனுசு: சந்திராஷ்டமம் இருப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதி உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தம் அடைவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.

மகரம்

மகரம்: கடினமான வேலைகளையும் மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் வரும். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுகொள்வீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

கும்பம்

கும்பம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.

 

மீனம்

மீனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram