சனியின் ஆட்டத்தை அடக்கிய சுக்கிரன்! மின்னல் வேகத்தில் பிறந்த அதிர்ஷ்ட காலம்… தனுசுவுக்கு இனி போரதிர்ஷ்டம்

பொதுவாக எந்த கிரகம் இடம் மாறினாலும் அது அனைத்து ராசிகளிலும் நல்ல அல்லது கெட்ட தாக்கத்தை ஏற்படும்.

இந்நிலையில் சனிக்கிழமை மதியம் முதல் சனியின் பிடியில் இருக்கும் தனுசு ராசியில் சுக்கிரன் நேர்கதியில் பயணிக்க போகிறார்.

இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான காலமாக இருக்கப் போகிறது என்பதை இப்போது காண்போம்.

தனுசு
ராசியின் முதல் வீட்டில் சுக்கிரன் செவ்வாயுடன் இணைந்துள்ளார். இதனால் தனுசு ராசிக்காரர்களுக்கு செல்வம் சேர்வதற்கான பல புதிய வழிகள் உங்களுக்கு கிடைகும். அதோடு, பலர் திடீரென்று பணத்தைப் பெறவும் வாய்ப்புள்ளது.

இக்லத்தில் உங்களின் ரகசிய எதிரிகளிடம் இருந்து விடுபடுவீர்கள்.

மிதுனம்
மிதுன ராசியின் 7 ஆவது வீட்டில் சுக்கிரன் இருக்கிறார். அதுவும் செவ்வாயுடன் இணைந்து இருப்பது, மிகுந்த பலன்களைத் தரும். அதுவும் உறவுகளில் நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் கௌரவம் உயரும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மொத்தத்தில் இக்காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 5 ஆவது வீட்டில் சுக்கிரன் இருக்கிறார். அதுவும் செவ்வாயுடன் இணைந்திருப்பதால், நற்பலன்களை வழங்கப் போகிறார். கல்வித் துறையில் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் காதல் உறவில் தீவிரம் அதிகமாக இருக்கும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 4 ஆவது வீட்டில் சுக்கிரன் செவ்வாயுடன் இணைந்திருப்பதால், புதிய வீடு அல்லது வாகனம் வாங்குவதற்கு வாய்ப்புகள் அமையும்.

இருப்பினும், சில செலவுகளும் அதிகரிக்கக்கூடும் என்பதால் செலவு செய்யும் போது கவனமாக இருங்கள்.

பணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.