இன்றைய ராசிபலன் 14-06-2018

மேஷம்: புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்கவும். தந்தையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிற்பகலுக்கு மேல் அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும். பணியாளர்கள் முரண்டு பிடிப்பார்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
ரிஷபம்: வாழ்க்கைத்துணையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள்.சிலருக்கு திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. குடும்ப விஷயமாக திடீர் பயணம் மேற்கொள்ளவேண்டி வரும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.
மிதுனம்: தேவையான பணம் கையில் இருப்பதால் செலவுகளை சமாளிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் சோர்வாக இருப்பீர்கள். மாலையில் சோர்வு நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டு.
கடகம்: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் அனுகூலம் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க கூடுதலாக உழைக்கவேண்டி வரும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.
சிம்மம்: தாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்புத் தருவார். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனையை அதிகாரி ஏற்றுக்கொள்வதுடன், அவரால் சில சலுகைகளும் உங்களுக்குக் கிடைக்கும்.. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.
கன்னி: சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மாலையில் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்வீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் உற்சாகமாகச் செய்துமுடிப்பீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பத்துடன் கோயில்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.
துலாம்: திடீர் செலவுகள் ஏற்படும். தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். பிற்பகலுக்கு மேல் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் பணியாளர்களால் செலவுகளும் ஏற்படக்கூடும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
விருச்சிகம்: இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். திடீர் செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். ஆனால், கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சிறு பிரச்னை ஏற்பட்டு சரியாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் தவிர்க்கவும்.
தனுசு: காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். பணவரவு எதிர்பார்த்தபடி இருந்தாலும், எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சிலருக்கு அலுவலகப் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். அதனால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கித் தொகை வசூலாகும். பணியாளர்கள் முரண்டு பிடிப்பார்கள். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
மகரம்: சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் பணிகளை உற்சாகமாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வகையில் ஆதாயம் உண்டாகும்.
கும்பம்: புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். திடீர் செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும். உடல் நலனில் கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும் சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
மீனம்: மகிழ்ச்சியான நாள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். பிற்பகலுக்கு மேல் உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.