இந்த இரண்டு ராசிக்காரங்களுக்கும் சனி என்ன செய்யப் போகிறார் தெரியுமா? தனுசு ராசியினரே எச்சரிக்கை!

இன்றைய கிரக நிலைகளைப் பொறுத்து தான் உங்கள் ராசிக்கான பலன்கள் அமையும்.

ஜோதிடத்தில் யார் அதிர்ஷ்டசாலி, யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டியவர்கள் என்பது எல்லாம் சிறப்பாக கணிக்கப்பட்டிருக்கும்.

அந்த வகையில் 12 ராசிக்குமான பலன்களை அறிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வீடு வாகனப்பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

ரிஷபம்
திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். அதிகாரப் பதவிகளில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர் கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். சனியின் ஆசியால் வெற்றி பெறும் நாள்.

மிதுனம்
கடந்த இரண்டு நாட் களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்ட நாள் பிரச்னை களுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் சகஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உற்சாக மான நாள்

கடகம்
ராசிக்குள் சந்திரன்இருப்பதால் ஓய்வு எடுக்க முடியாத படி வேலைச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லுவது நல்லது. சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

சிம்மம்
சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல் வீண் செலவுகள் வந்து போகும். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் முதலீடு செய்வது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.

கன்னி
உங்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் நன்றாக பயன்படுத்திக்கொள்வீர்கள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல்செய்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தி யோகத்தில் சக ஊழியர்களின் பாராட்டு கிடைக் கும். புகழ் பெறும் நாள்.

துலாம்
கண்ணும் கருத்துமாக உங்கள் செயலில் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் நண்பர்களின் உதவி கிடைக்கும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். மனைவியால் ஆதாயம் பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

விருச்சிகம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கிதுடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய தொடர்பு ஏற்படும். உத்தியோகத்தில் உயர்வும் கிடைக்கும். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

தனுசு
சந்திராஷ்டமம் தொடர்வதால் எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். வாகன பயணங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

மகரம்
கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். நன்மை கிட்டும் நாள்.

கும்பம்
சனி பகவானின் ஆசியால் பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதக மான தீர்ப்பு வரும். எதிர்பாராத தன லாபம் உண்டு.உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். அமைதியான நாள்.

மீனம்
புதிய திட்டங்களைத்தீட்டி அவற்றை செயல்படுத்துவீர்கள் பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிந்து முன்னேற்றுவீர்கள். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லுவது நல்லது. சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தி யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்