உடலின் இந்த இடங்கள் அடிக்கடி துடிக்கின்றதா?… அப்போ நிச்சயம் நல்ல செய்தி வரப்போகிறதாம்

சாமுத்திரிகா சாஸ்திரத்தின் படி நம்முடைய உடல் பாகங்கள் அதிக உணர்திறன் கொண்டவை. அவை மூளையிலிருந்து வரும் சிக்னல்களின் மூலம் உங்களுடைய எதிர்காலத்தை பற்றிய சில எச்சரிக்கைகளை உங்களுக்கு கூற முடியும். இந்த எச்சரிக்கைகளில் முக்கியமான ஒன்று தசைகளில் ஏற்படும் துடிப்பு ஆகும்.

விஞ்ஞானரீதியாக பார்த்தால் தசைகளில் ஏற்படும் துடிப்பு ஒரு தன்னிச்சையான நிகழ்வாகும். சிலசமயம் உங்களால் கூட அதனை தடுக்க முடியாது. இந்த தசை துடிப்புகளை உங்களின் எதிர்காலத்தை அறிய உதவும். இந்த பதிவில் உடலின் வெவேறு பாகங்கள் துடிப்பது உங்கள் எதிர்காலத்தை பற்றி என்ன கூறுகிறது என்று பார்க்கலாம்.

உடலின் இடது பக்கம்
சாமுத்ரிகா சாஸ்திரியத்தின் படி ஒருவரின் உடலின் இடது பாகம் தொடர்ந்து துடித்தால் அவருக்கு கெட்ட செய்தி வரப்போகிறது என்று அர்த்தம். அது குடும்பத்தில் நிகழும் திடீர் மரணமாக இருக்கலாம் அல்லது வேளையிழப்பாக கூட இருக்கலாம்.

உடலின் வலது பக்கம்
உடலின் வலது பக்கம் துடித்தால் அவருக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது என்று அர்த்தம். இது பெண்களுக்கு முற்றிலும் மாறுபடும். பெண்களுக்கு இடதுப்பக்கம் துடித்தால் நல்ல செய்தியும், வலதுப்பக்கம் துடித்தால் கெட்ட செய்தியும் வரும்.

நெற்றி
ஒருவரின் நெற்றி தொடர்ந்து துடித்து கொண்டு இருந்தால் அவர்கள் விரைவில் வாழ்க்கையில் பெரிய இன்பங்களையும், பணவரவையும் பெறப்போகிறார்கள் என்று அர்த்தம்.

கண்கள்
பொதுவாக கண் துடிப்பது கலகத்திற்கு வழிவகுக்கும் என்று கூறுவார்கள். ஆனால் அது உண்மையல்ல. இடது கண் துடித்தால் விரைவில் உங்களை தேடி நல்ல செய்தி வரும். அதுவே வலது கண் துடித்தால் உங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற போகிறது என்று அர்த்தம்.

கன்னங்கள்
உங்களின் கன்னங்கள் தொடர்ந்து துடித்து கொண்டு இருந்தால் நீங்கள் விரைவில் அதிக செல்வத்தை அடையப்போகிறீர்கள் என்று அர்த்தம். இது மிகவும் அபூர்வமான ஒன்று, ஆனால் இது நடந்தால் நல்ல செய்தி உங்களை நிச்சயம் தேடிவரும்.

உதடு
நீங்கள் பேசும்போது உங்கள் உதடுகள் துடித்தால் உங்கள் வாழ்க்கையில் விரைவில் புதிய நண்பர்கள் கிடைக்க போகிறார்கள் என்று அர்த்தம் அல்லது உங்களின் பழைய நண்பர்கள் மீண்டும் உங்களுடன் இணைய வாய்ப்புள்ளது என்று அர்த்தம்.

வலது தோள்பட்டை
உங்களின் வலது தோள்பட்டை துடித்தால் விரைவில் உங்களின் பணக்கஷ்டம் நீங்க போகிறது என்று அர்த்தம். புதிய வேலையோ அல்லது வேலையில் பதவி உயர்வோ கிடைக்க வாய்ப்புள்ளது.

இடது தோள்பட்டை
உங்களின் இடது தோள்பட்டை துடித்தால் உங்களின் ஆரோக்கியம் மேம்பட போகிறது என்று அர்த்தம். உஙக்ளின் இரண்டு தோள்பட்டைகளும் ஒரே நேரத்தில் துடித்தால் நீங்கள் பெரிய சண்டையில் வெற்றி பெற போகிறீர்கள் என்று அர்த்தம்.

உள்ளங்கை
உங்களின் உள்ளங்கை துடித்தால் நீங்கள் விரைவில் பெரிய சிக்கல்களால் சூழப்பட போகிறீர்கள் என்று அர்த்தம். எனவே அதனை எதிர்கொள்ள உங்களை தயார்படுத்தி கொள்வது நல்லது.

விரல்கள்
உங்களின் விரல்களில் துடிப்பு ஏற்பட்டால் நீங்கள் விரைவில் உங்கள் வாழ்வில் இழந்த உறவுகளை மீண்டும் சந்திக்க போகிறீர்கள் என்று அர்த்தம். அவர்கள் மூலம் மீண்டும் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படக்கூடும்.

வலது முழங்கை
உங்களின் வலது முழங்கை நீண்ட நேரம் துடித்தால் விரைவில் நீங்கள் மோசமான சண்டையில் ஈடுபட போகிறீர்கள் என்று அர்த்தம். அது உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக கூட இருப்பார்கள். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் சண்டையை நீங்கள் தவிர்ப்பதுதான் நல்லது.

இடது முழங்கை
உங்களின் இடது முழங்கை துடித்தால் விரைவில் நீங்கள் சமூகத்தில் பெரிய அந்தஸ்தை பெற போகிறீர்கள் என்று அர்த்தம். உங்களின் சமூக அந்தஸ்து விரைவில் உயரும்.

தொடை
உங்களின் வலது தொடை துடித்தால் நீங்கள் விரைவில் சமூகத்தில் நீங்கள் செய்த காரியத்திற்காக அவமானத்தை அடைவீர்கள். இடது தொடை துடித்தால் உங்கள் ஆரோக்கியம் மேம்பட போகிறது என்று அர்த்தம்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like